நடிகர் கருணாஸ், ஒரு திரைப்பட நடிகர், இசைக்கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தனது ஆரம்ப நாட்களில் சினிமா துறையில் எதிர்கொண்ட சில அனுபவங்களை குறித்து எஸ்.எஸ்.மியூசிக் யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார். நடிகர் கருணாஸ், தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இந்நிலையில் தனது ஆரம்பக்கால வாழ்க்கை குறித்து அவர் கூறியுள்ளார்.
Advertisment
தான் ஒரு இளம் கலைஞராக இருந்தபோது, ஒரு இசை நிகழ்ச்சிக்கு ரூ.5000 சம்பாதித்ததாக கருணாஸ் நினைவு கூர்ந்தார். அந்தத் தொகையை அவர் உடனடியாக தனது நண்பர்களுக்கும், உடன் பணிபுரிபவர்களுக்கும் சம்பளமாகக் கொடுத்துவிட்டு, தனக்கு ரூ. 1,000 மட்டுமே வைத்துக்கொள்வாராம். இந்தக் குணம், பணத்தை விட சக ஊழியர்களின் உழைப்புக்கு மதிப்பு கொடுக்கும் அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தினாலும் இதே குணம்தான் அவரைப் பலமுறை சிரமத்திலும் ஆழ்த்தியதாக கூறினார்.
தன்னுடன் இருந்த நண்பர்கள் தங்கள் சம்பளத்தை வாங்கியதும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வார்கள் என்றும், அதனால் எப்போதாவது பணம் தேவைப்படும்போது அதை எடுத்துப் பயன்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார். ஆனால், அப்படிப் பணம் சேமிக்கும் பழக்கம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
கச்சேரி முடிந்த பிறகு, ஒட்டுமொத்த நண்பர்கள் குழுவும் சேர்ந்து மது அருந்தச் செல்வார்களாம். அந்த நேரத்தில், கருணாஸ் சம்பாதித்த ரூ. 1,000 மொத்தமும் செலவாகிவிடும். “நான் குடித்தால், அது நானாக இருக்க மாட்டேன்” என்று சொன்னதைப்போல், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும்போது, பணத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லையாம்.
Advertisment
Advertisements
ஆனால், அடுத்த நாள் காலையில் விடிந்ததும், நண்பர்கள் தங்களது சம்பள பணத்தோடு வீட்டிற்கு சென்று விடுவார்கள் ஆனால் என்னிடம் இருந்த மொத்த பணமும் காலியாகிவிடும். அப்போது, கையில் பணமே இல்லாமல் தனியாக நிற்பாராம் கருணாஸ்.
“என் வாழ்க்கை இப்படித்தான், சேமிப்புப் பழக்கமெல்லாம் எனக்கு இல்லை” என்று அவர் சொல்லி முடித்தபோது, அதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் கிரேஸ் வந்த பிறகு பொறுப்பு கூடியது என்று அவர் கூறினார்.