இங்க வரலட்சுமி விரதம், அங்க ‘கார்வா சவுத்’: கணவருக்காக விரதமிருக்கும் நடிகைகள்!

நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து, பாரம்பரியமான ஆடைகளை அணிந்துகொண்டு இந்த சடங்கைப் பின்பற்றுகிறார்கள் பெண்கள்.

Karwa Chauth 2019

Karwa Chauth 2019: சர்கி (உணவு), பாரம்பரிய உடை, நெற்றி வகிட்டில் குங்குமம் ஆகியவை கார்வா சவுத்தின் மூன்று முக்கியமானவை. இந்திய பெண்கள், கடவுளிடம் தங்கள் கணவரின் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் நீண்ட ஆயுளைக் கோருவதற்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா தான் இந்த “கார்வா சவுத்”.  திருமணமான பெண்ணின் காலண்டரில் மிக முக்கியமான தேதிகளில் இதுவும் ஒன்று.

நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து, பாரம்பரியமான ஆடைகளை அணிந்துகொண்டு இந்த சடங்கைப் பின்பற்றுகிறார்கள் பெண்கள். குறிப்பாக வட இந்தியாவில் கடைபிடிக்கப்படும் முக்கியமான விஷயங்களும் கர்வா சவுத்தும் ஒன்று.

சரி, பாலிவுட் நடிகைகளின் ”கர்வா சவுத்” லுக்கை இங்கு பார்ப்போம்.

கரீனா கபூர்

kareena kapoor
எமரால்ட் பச்சை நிறத்தில், சாடின் சேலை உடுத்தியிருக்கிறார் கரீனா கபூர் கான். சேலைக்கு மேட்சான நெக்லஸும், வகிட்டில் குங்குமமும் கரீனாவுக்கு ஒரு நேர்த்தியான தோற்றத்தைத் தருகிறது. இதில் புதிதாக திருமணமான பெண்ணைப் போல் அவர் காட்சியளிக்கிறார்.

தீபிகா படுகோனே

Deepika padukone
புதிதாக திருமணமான மணமகளின் புன்னகையை விட ஆழகான ஒன்று வேறு எதுவும் இல்லை. தீபிகாவும் அப்படித் தான்! இந்தப் படம் அவரது திருமண வரவேற்பில் எடுக்கப்பட்டது. வெள்ளை மற்றும் தங்க நிற பனராசி சேலை, பெரிய காதணிகள், கழுத்தில் நிக்லஸ், இதற்கு அழகான ஃபினிஷிங்கைக் கொடுக்கிறது அவரது குங்குமம்.

பிரியங்கா சோப்ரா

Priyanka Chopra
பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பரில் பாடகர் நிக் ஜோனாஸை மணந்தார். வெள்ளி நிற லேஸ் சேலை அணிந்து, வகிட்டில் குங்குமம் வைத்து, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறார். சின்ன பொட்டு, குங்குமம் வைத்து இந்தோ – வெஸ்டர்ன் லுக்கில் காட்சியளிக்கிறார்.

ஷில்பா ஷெட்டி

shilpa shetty kundra
ஷில்பா ஷெட்டியின் முகத்தில் மகிழ்ச்சியான புன்னகை தெரிகிறது. சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து, நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலியோடு காட்சி தருகிறார். மேக்கப் இல்லாத இந்த எளிய தோற்றம், பாரம்பரிய உடை அணிந்தாலே அழகு கூடிவிடும் என்பதைக் காட்டுகிறது.

ரேகா

Rekha
தமிழ் நடிகர் ஜெமினி கணேசன் – புஷ்பவல்லி தம்பதியருக்குப் பிறந்த மூத்த மகள் தான் ரேகா. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கியவர். எந்தவொரு உடைக்கும் குங்குமத்தை மேட்ச் செய்துக் கொண்டால், அது ரேகாவாக தான் இருக்க முடியும். 65 வயதாகும் ரேகாவுக்கு 1990-ல் முகேஷ் அகர்வால் என்பவருடன் திருமணமானது. ஆனால் 91-ல் ரேகாவின் கணவர் இறந்து விட்டார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Karwa chauth 2019 deepika padukone peecee kareena kapoor shilpa shetty rekha

Next Story
சரத்குமாருக்கு ’கோடீஸ்வரன்’, ராதிகாவுக்கு ’கோடீஸ்வரி’ – அடடா! என்ன ஒற்றுமை…Raadika Sarathkumar, tamil serial news, tamil tv shows
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com