Actress Kasthuri Entry In To Bigg Boss Tamil 3: விஜய் டி.வி.யில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்வில், புதிய அறிமுகமாக நடிகை கஸ்தூரி நுழைந்திருக்கிறார். ‘இந்தா இருக்குடா கிஃப்ட்’ என அவரை கொண்டாடுகிறார்கள் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்.
பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி, விஜய் டி.வி.யில் நடந்து கொண்டிருக்கிறது. பாத்திமா பாபு, மோகன் வைத்யா, ரேஷ்மா, வனிதா, மீரா மிதுன், சரவணன் ஆகியோர் அடுத்தடுத்து ‘எலிமினேட்’ ஆகியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் பிக்பாஸ் சுவாரசியத்தை அதிகரிக்க நடிகை கஸ்தூரி அதிரடியாக பிக்பாஸ் இல்லம் புகுந்திருக்கிறார்.
இந்தா இருக்கு கிஃப்டு!#Day46 #Promo1 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #VijayTelevision pic.twitter.com/0xg0VZtZ0M
— Vijay Television (@vijaytelevision) August 8, 2019
இது தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 8) விஜய் டி.வி வெளியிட்ட புரொமோ-வில், ஒரு பிரமாண்ட கிஃப்ட் பாக்ஸ் பிக்பாஸ் இல்லத்தினுள் கொண்டு வைக்கப்பட்டிருக்கிறது. லாஸ்லியா, சாக்ஷி உள்ளிட்டவர்கள், ‘இந்த இருக்குடா கிஃப்ட் பாக்ஸ்’ என கூவியபடி அதை நோக்கி ஓடுகிறார்கள். கிஃப்ட் பாக்ஸை திறந்து பார்த்தால் சீனியர் நடிகை கஸ்தூரி உள்ளிருந்து வெளியே வருகிறார். லாஸ்லியாவும் மற்றவர்களும் சந்தோஷம் பொங்க அவரைக் கட்டிக் கொள்கிறார்கள். சாக்ஷியை நோக்கி கஸ்தூரி, ‘சாக்ஷி, உங்கிட்ட நிறைய கேள்வி கேட்க வேண்டியிருக்கு’ என்கிறார்.
ஆக, கேள்விகள் மூலமாக ஏதோ ஒரு பிரளயத்தை கிளப்ப கஸ்தூரி அனுப்பப் பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. சாதாரணமாகவே சர்ச்சைகளுடன் தினமும் டான்ஸ் ஆடுபவர் கஸ்தூரி. சர்ச்சைகளுக்கென்றே அவதாரம் எடுத்திருக்கும் பிக்பாஸ் ஷோவில் அவருக்கு இடம் கிடைத்தால் சும்மா விட்டுவிடுவாரா?
அநேகமாக கஸ்தூரி மூலமாக சில அரசியல், சமூக பிரச்னைகளைத் தொட்டு, சர்ச்சை வெடிகளை பிக்பாஸ் கொளுத்திப்போட வாய்ப்பு இருக்கிறது. பொழுது போகும், பிக்பாஸ் ரசிகர்களுக்கு!
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Kasthuri bigg boss tamil promo today actress kasthuri entry as gift to bigg boss tamil