நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், கமல் ஹாசன் அணிந்திருக்கும் ஆடை குறித்த சந்தேகத்தை எழுப்ப, நெட்டிசன்கள் அந்த டுவீட்டில் மரண கலாய் செய்துள்ளனர்
நடிகர் கமல் ஹாசன், தனது மகள் ஸ்ருதியுடன் அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து சுதந்திர தின பேரணியில் கலந்துக்கொண்டார்.
கமல் ஹாசன் ஆடைப் பற்றி நடிகை கஸ்தூரி டுவீட்:
அதன் பிறகு நியூயார்க் நகரில் மற்றொரு ஆடை அணிந்து புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் கமல் ஹாசன் மற்றும் விஸ்வரூபம் நடிகை பூஜா குமார் இருவரும் வித்தியாசமான உடை அணிந்திருந்தனர். எவ்வளவோ பஞ்சாயத்துகள் மீதம் இருக்க கமல் அணிந்திருக்கும் ஆடை மேல் கஸ்தூரிக்கு சந்தேகம் வந்தது.
நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நீங்கள் அணிந்திருக்கும் ஆடை பெயர் என்ன?’ என்று வேடிக்கையாக கேள்வி கேட்டார். அந்த டுவீட்டை பார்த்த நெட்டிசன்கள், இது தான் சாக்கு என்று கமல் அணிந்திருப்பது சுடிதார் என ஒரு தரப்பும், இல்லை இல்லை அது நைட்டி என இன்னொரு தரப்பும் விவாதத்தில் இறங்கியது. இந்த விவாதத்தில் கூடுதலாக எண்ணை ஊற்ற ஒவ்வொருவரின் கமெண்டிற்கும் ரிப்ளை கொடுத்தார் கஸ்தூரி.
இவ்வாறு கலைக்கட்டிய கஸ்தூரி டுவீட்டில் நடந்தது பற்றிய தொகுப்பு இதோ உங்களுக்காக:
August 2018
இது தான் மாடர்ன் நைட்டி என்கிறார் ஒருவர் ????
August 2018
August 2018
இந்த நிலைமையை சரியா யூஸ் பண்ணனும் என ஒருவர் டுவீட் போட்ட கஸ்தூரியையே கலாய்துவிட்டார் ????
கமலே ஷாக் ஆகிட்டாராம்... நெட்டிசன்ஸ் சொல்றாங்க
August 2018