/tamil-ie/media/media_files/uploads/2019/12/Pandian-Stores-serial.jpg)
Pandian Stores serial
Pandian Stores on Vijay TV : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ‘ஆனந்தம்’ படத்துடன் நிறையவே பொருந்திப் போகிறது.
கதிரிடம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போன முல்லைக்குப் பிறந்தநாள். திருமணமாகி வரும் முதல் பிறந்தநாளும் கூட. மகளின் பிறந்தநாளை முல்லையின் அப்பா முருகேசன், கதிரின் அண்ணன் மூர்த்தியிடம் கூறுகிறார். அப்படியென்றால் முல்லையை வீட்டிற்கு அழைத்து வந்து விடும்படி கேட்டுக் கொள்கிறார் மூர்த்தி. அதன்படி, அவரும் அழைத்து வர, அங்கு கதிர் மிஸ்ஸிங். கேக் வாங்கி வந்து வைத்துவிட்டு, அனைவரும் கதிருக்காக காத்திருக்கிறார்கள்.
மறுபுறம் முல்லையை வாழ்த்த வீட்டிற்கு சென்ற கதிருக்கு, அவள் அங்கு இல்லை, தன் வீட்டுக்கு வந்துவிட்டாள் என்பது தெரியாது. ‘நாம இவ்ளோ தூரம் போயிருக்கோம். அவ்ளோ சத்தமா நான் பேசுனது கூடவா கேக்கல, என தனிமையில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறான் கதிர். சரி இனி அவனை எதிர்பார்த்து பயனில்லை என்ற நோக்கில், வீட்டிலிருப்பவர்கள் கேக் கட் பண்ண சொல்கிறார்கள். ஆனால் முல்லைக்கு மனது முழுக்க கதிரின் நினைவுகள்.
பொழுது போய் இருட்டியும் விடுகிறது. கதிருக்காக காத்திருந்த முல்லையின் அப்பாவும், வீட்டிற்கு கிளம்பி விடுகிறார். அவனை தவறாக நினைக்க வேண்டாம் என மூர்த்தியும், தனமும் முருகேசனிடம் கேட்டுக் கொள்கிறார்கள். அவனுக்கு முல்லை பிறந்தநாள் எனத் தெரியாது. அதனால் தான் வரவில்லை என்கிறார்கள்.
அவர் சென்ற பிறகு, “மாமா நமக்காகத்தான் சிரிச்சுட்டு போறாரு, மனசளவுல வருத்தத்துல தான் போறாரு” என்று தனத்திடம் கூறுகிறார் மூர்த்தி. கதிரை நினைத்தால் பயமாக இருக்கிறது என தனமும் கூறுகிறாள். ”அவர் வேலையாத்தான் வெளில போய்ருப்பாரு, அதனால தான் இங்க வரல, நீங்க எதும் நெனச்சுக்காதீங்க” என்று அப்பாவிடம் கூறி வழி அனுப்பி வைக்கிறாள் முல்லை.
எப்போது இந்த தவறான புரிதல் சரியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.