/tamil-ie/media/media_files/uploads/2020/12/Tamil-Serial-News-Chithra-Kumaran-Kathir-Mullai.jpg)
Tamil Serial News, Chithra Kumaran, Kathir Mullai
VJ Chithra: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்த சித்ரா திடீரென தற்கொலை செய்துக் கொண்டது சின்னத்திரை வட்டாரத்திலும், ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சித்ரா மிகவும் தைரியமான பெண் என்றும் அவர் நிச்சயமாக தற்கொலை செய்துக் கொள்ள வாய்ப்பில்லை என்றும் சித்ராவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். ஆனால் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பதிவு திருமணம் செய்துக் கொண்ட, ஹேமந்த் ரவி தான் தனது மகளின் சாவுக்கு காரணம் எனவும் சித்ராவின் தாயார் விஜயா மீடியாக்களிடத்தில் கூறினார்.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு ஜோடியாக நடித்து வந்த குமரன், "சித்ரா எப்படி இறந்தார் என்பது பற்றி நான் பேச வரவில்லை. அதை பேசினால் சித்ரா மீண்டும் வரப்போவதும் இல்லை. என்னுடைய வருத்தம் எல்லாம் அவர் யாராவது ஒருத்தரிடமாவது தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி இருக்கலாம் என்பதே. பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் 'உங்களால் தான் பிரச்சனையே வருது' என்று கிண்டல் செய்வார். காரணம் அவருக்கு வேறு வேலைகள் இருந்தும், நான் நடிக்க வந்து விடுவதால் அவரும் நடிக்க வேண்டி இருப்பதாக விளையாட்டாக கூறுவார். சித்ரா ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தார். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஓய்வு தேவைப் படவில்லை. அவர் அந்த பிஸி வாழ்க்கையை தான் விரும்பினார்.அவருக்கு இப்பொழுது ஒரு மிகப்பெரிய ஓய்வு கொடுக்கப்பட்ட இருக்கிறது" என்று வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.