இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய படத்துக்கு கவிஞர் கண்ணதாசன் 2 பாடல்களை எழுதிக் கொடுத்துவிட்டார். அந்த படத்தில் 3வது பாடல் எழுதி சூழ்நிலையைச் சொல்லி பாடல் எழுதி வாங்குவதற்குள் கவிஞர் கண்ணதாசன் பிசியாகி விட்டார். அதனால், ஒரு சினிமா பத்திரிகை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியின் மேடையிலேயே, இயக்குநர் பாலசந்தர் ஒரு பெண்ணுக்கு 3 ஆண்கள் போட்டி போடும் சூழ்நிலையைச் சொல்லி கவிஞர் கண்ணதாசன் மேடையிலேயே அந்த பாடலை எழுதி எம்.எஸ்.வி இசையமைத்திருக்கிறார். அது என்ன பாடல், எந்த படம் எங்கு இங்கே பார்ப்போம்.
1976-ம் ஆண்டு ஒரு சினிமா பத்திரிகை, ஒரு புதுவிதமான விழா நடத்தலாம் என்று முடிவுகிறார்கள். அதற்கு, கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் வருவதால் அவரை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு செய்கிறார்கள். ஆனால், நிகழ்ச்சி வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.
அந்தக் காலத்தில், சினிமா பாடல்கள் எப்படி உருவாக்கப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியாது. அப்படி என்ன புதுமையான நிகழ்ச்சி என்றால், மேடையிலேயே படத்தின் சூழ்நிலையைச் சொல்லி, அதற்கு கவிஞர் கண்ணதாசன் மேடையிலேயே பாட்டு எழுத வேண்டும். அதற்கு எம்.எஸ்.வி இசையமைக்க வேண்டும்.
ஆனால், இதை அந்த சினிமா பத்திரிகை, கவிஞர் கண்ணதாசனிடம் சொல்லவில்லை. ஆனால், அந்த சினிமா பத்திரிகை, இயக்குநர் பாலச்சந்தரை அணுகி, இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் கவிஞர் கண்ணதாசனிடம் படத்தின் சூழலைச் சொல்லி பாட்டு கேட்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இதற்கு இயக்குநர் பாலச்சந்தர் உடனே ஒப்புதல் தெரிவிக்கிறார். காரணம், அப்போது பாலச்சந்தர் இயக்கிய அவர்கள் படத்தில், கவிஞர் கண்ணதாசன், ‘காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி, கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடுமா?’ என்ற பாடலையும் ‘இருமனம் கொண்ட திருமண வாழ்வில், இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்’ என்ற பாடலையும் ஏற்கெனவே எழுதிக் கொடுத்துவிட்டார். அந்தப் படத்திற்கு 3வது பாடலை எழுதுவாங்குவதற்குள் கண்ணதாசன் பிஸியாகிவிட்டார். எப்போது நேரம் கிடைக்கும் அந்த பாடலை எழுதி வாங்கிவிடலாம் என்று பாலச்சந்தர் யோசித்துக்கொண்டிருந்தார். அதனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு கவிஞர் கண்ணதாசனிடம் பாடலை எழுதி வாங்கி விட வேண்டும் என்று இயக்குநர் பாலச்சந்தர் திட்டமிட்டார்.
பாலச்சந்தர் இயக்கிய அவர்கள் படத்தில் எந்த சூழலுக்கு கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுத வேண்டும் என்றால்,
அவர்கள் படத்தில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ரவிகுமார், சுஜாதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில், நடிகை சுஜாதா, முதலில் ரவிகுமாரைக் காதலிப்பார். ஆனால், சூழ்நிலை காரணமாக அவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாமல் போகும். பிறகு, ரஜினியைத் திருமணம் செய்துக்கொள்கிறார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஆனால், ரஜினி கொடுமைப்படுத்தும் கணவராகவும் இருக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் கொடுமை தாங்கமுடியாமல் சுஜாதா தனது குழந்தையுடன் சென்னைக்கு தனியாக வந்து ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறார். அப்போது, அங்கே வேலை செய்யும் கமல்ஹாசன் சுஜாதாவை ஒருதலையாக காதலிக்கிறார். சுஜாதாவுக்கும் ஒரு மயக்கம் இருக்கும்.
அப்போது, பழைய காதலர் ரவிகுமாரும் சுஜாதா இருக்கும் வீட்டு அருகே வருகிறார். இப்போது, சுஜாதாவுக்கு குழப்பம் ஏற்படும். பழைய காதலரும் விரும்புவார். இதனிடையே ரஜினிகாந்த் மணம் திரும்பி தனது மனைவி சுஜாதாவைப் பார்த்து மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ விரும்புவார். ஆனால், சுஜாதா முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருப்பார். கொடுமைப்படுத்தி மனம் திருந்திய கணவருடன் வாழ்வதா, புதிய காதலருடன் வாழ்வதா, அல்லது பழைய காதலருடன் சேர்ந்து வாழ்வதா என்ற குழப்பம் நிலவும். இந்த 3 பேர்களும் சுஜாதாவுக்கு அன்புடன் மாறி மாறி உதவி செய்வார்கள்.
ஒரு பெண்ணுக்கு 3 ஆண்கள் போட்டி போடும் நிலையில், முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் பெண், இந்த சூழ்நிலைக்கு கவிஞர் கண்ணதாசன் பாட்டு எழுத வேண்டும்.
சினிமா பத்திரிகை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியும் நடக்கிறது. கவிஞர் கண்ணதாசனும் வருகிறார். பிறந்தநாள் கொண்டாட்டம் என்று பார்த்தால், எதிர்பாராத விதமாக, இயக்குநர் பாலச்சந்தர் மேடையிலேயே படத்தின் சூழ்நிலையைச் சொல்லி பாடல் எழுத வேண்டும் எனக் கேட்க, கவிஞர் கண்ணதாசன் சற்றும் யோசிக்காமல் மேடையிலேயே அந்த சூழ்நிலைக்கு அற்புதமான ஒரு பாடல் எழுதித் தந்தார். அந்த பாடல், “அங்கும் இங்கும் பாதை உண்டு, இன்று நீ எந்தப் பக்கம், ஞாயிறு உண்டு, திங்கள் உண்டு எந்த நாள் உந்தன் நாளோ” என்ற பாடல்தான். கண்ணதாசன் மேடையிலேயே எழுதிக் கொடுத்த பாடல்தான் இந்த பாடல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“