/indian-express-tamil/media/media_files/2025/09/07/screenshot-2025-09-07-184256-2025-09-07-18-43-15.jpg)
தாராபுரத்தில் கடந்த 1933ஆம் ஆண்டு பிறந்தவர் நாகேஷ். பள்ளி படிப்பை அங்கேயே முடித்துவிட்டு நாடகத்தின் மீது இருக்கும் ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர் சென்னை தி.நகர் மேன்ஷனில் தங்கினார். அங்கிருந்தபடி நாடகத்தில் நடிப்பதற்கு முயன்றுகொண்டிருந்தவருக்கு படிப்படியாக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இவருடைய ரூம் மேட்டுகளில் ஒருவர் பாடலாசிரியர் வாலி என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்த அவர் மனமுள்ள மறுதாரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் தோல்வியடைந்தது. தொடர்ந்து நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு பெயரை பெற்றுக்கொடுத்தது. அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது கே.பாலசந்தர் எழுதிய நாடகத்தை மையமாக வைத்து கிருஷ்ணன் -பஞ்சு இயக்கிய சர்வர் சுந்தரம் திரைப்படம். அந்தத் திரைப்படத்தில் நாகேஷின் உடல்மொழியும், நடிப்பும் வேறு தளத்தில் இருந்தன. இதனால் அனைவராலும் கவனிக்கப்பட்டார் நாகேஷ்.
சர்வர் சுந்தரம் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தவருக்கு திருவிளையாடல் திரைப்படம் அடுத்த திருப்புமுனையாக அமைந்தது. அதில் சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடித்து அப்ளாஸை அள்ளினார். அதேபோல் அவர் நடித்த நீர்க்குமிழி, காதலிக்க நேரமில்லை, பட்டினத்தில் பூதம், தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட்டடித்தன. நாகேஷின் நடிப்பும் உச்சம் சென்றது.
நாகேஷ் கிட்டத்தட்ட 1000 படங்கள்வரை நடித்திருக்கிறார். காமெடியன், கேரக்டர் ரோல், வில்லன் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் புகுந்து விளையாடக்கூடியவர் நாகேஷ். இன்றுவரை யார் காமெடி செய்தாலும் அதில் நாகேஷின் உடல்மொழி கொஞ்சமேனும் வந்துவிடும். அந்த அளவு அவர் இந்த தமிழ் திரை உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறார்.
நகைச்சுவையில் மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரத்திலும் கலக்குபவர் நாகேஷ். அதற்கு உதாரணமாக ரிதம் படத்தை சொல்லலாம். மீனாவிடம் ஒரு காட்சியில் கிழியுற அப்பளம் பார்த்துருக்கியா, தயிர் மும்பையிலிருந்து புனே வரைக்கும் புளிக்கும் என காமெடியாக பேசிவிட்டு என்ன பெரிய அப்பளம் தயிர் மகன் அவ்வளோ கஷ்டப்படுறான் என எமோஷன் ஸோனுக்குள் அவ்வளவு அசால்ட்டாக நுழைந்து பார்ப்பவர்களை சட்டென கலங்கடித்துவிடுவார். முக்கியமாக யாரையும் எளிதில் பாராட்டிவிடாத கே.பாலசந்தர் பலரிடம் நாகேஷ் போன்ற ஒரு மகா நடிகனை எங்குமே பார்க்க முடியாது என புகழ்ந்திருக்கிறார்.
அவரை பற்றி ஒரு பேட்டியில்ன் நடிகர் கிருஷ்ணன் பேசுகையில், "நாகேஷ் அவர்கள் ஒரு முறை அவரது வீட்டில் ட்ரோப் செய்ய சொன்னார். அவர் வந்து நாகேஷ் யாரிடமும் கேட்டாக மாட்டான் அனால் உன்னிடம் கேட்கிறேன் ட்ரோப் பண்ணுவியா என்று கேட்டார். நான் உடனே சரி என்று சொல்லிவிட்டேன். ஏ சி போட சொன்னார் அப்படியே அவர் சிகரட் பிடிப்பதால் ஜன்னலையும் இறக்க சொன்னார். மிகவும் உரிமை எடுத்து பேசினார்.
அப்படி தான் அவர் இறப்பதற்கு முன்னே நான், மோகன் மற்றும் கமல் அவர்கள் அவரை பார்க்க சென்றோம். அவர் மிகவும் வருத்தத்துடன் என்னை இனி யாரு பார்த்துக்கொள்வார்கள். பிள்ளைகள் கண்டிப்பாக பார்க்க மாட்டார்கள் என்ன கூறினார். அப்போது தான் நான் முதன் முதலில் கமல் கண்ணில் இருந்து கணீர் வருவதை பார்த்தேன் நேரில். பிறகு அவர் தான், நாங்கள் இருப்போம் கண்டிப்பாக என்று கூறினார்." என்று விரிவாக பகிர்ந்துகொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.