scorecardresearch

மீண்டும் தந்தையாகும் திலீப்.. நடிகை காவ்யா மாதவன் கர்ப்பம்!!

இவர்களின் திருமணத்தை முன்னின்றி நடத்தி வைத்தது திலீப்பின் மகள் மீனாட்சி.

காவ்யா மாதவன்
காவ்யா மாதவன்

மலையாள நடிகர் திலீப்பை 2 ஆவது திருமணம் செய்துக் கொண்ட  நடிகை காவ்யா  மாதவன் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

காவ்யா மாதவன் கர்ப்பம்:

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடி என்றால் அது நடிகர் திலீப் – காவ்யா ஜோடி தான். மலையாள சினிமாவில் இருவரும் இணைந்து ஏகப்பட்ட சூப்பர் டூப்பர் படங்களை நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் திலீப் மலையாள நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் மீனாட்சி என்ற மகளும் இருக்கிறார். இந்நிலையில் மஞ்சு வாரியர் – திலீப் இருவரும் மனகசப்பு காரணமாக நீதிமன்றத்தில் விவகாரத்து பெற்றுக் கொண்டு முறைப்படி பிரிந்தனர். மகள் மீனாட்சி தந்தையிடம் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறினார். இதனால் திலிப் தனது மகளை தன்னுடனே வைத்துக் கொண்டார்.

காவ்யா மாதன்
மகள் மீனாட்சி உடன் திலீப்

அதன் பின்பு, நடிகர் திலீப் இரண்டாவதாக,நடிகை காவ்யா மாதவனை கடந்த 2016 ஆம் ஆண்டும் திருணம் செய்துக் கொண்டார். இவர்களின் திருமணத்தை முன்னின்றி நடத்தி வைத்தது திலீப்பின் மகள் மீனாட்சி. கணவன் மற்றும் மகள் இருவரையும் விட்டு தனியாக வாழ்ந்து வரும் மஞ்சு வாரியர் சமூகசேவைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

நடிகை காவ்யா மாதவனுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். கடந்த 2009 ஆம் ஆண்டு தொழில் அதிபர் நிஷால் சந்திராvஐ திருமணம் செய்துக்கொண்ட காவ்யா மாதவன், அந்த வருடமே விவகாரத்து வாங்கினார். காவ்யா – திலீப் திருமணத்திற்கு மலையாள திரை நட்சத்திரங்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தான் மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில் திலீப் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் தான் இந்த வழக்கில் ஜாமீன் பெற்று திலீப் விடுதலை ஆனார்.

இந்நிலையில் நடிகை காவ்யா மாதவன் கர்ப்பாமக் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களின் குடும்பத்தினர் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kavya madhavan expecting their first child

Best of Express