சீரியல் நடிகைகள் சைத்ரா ரெட்டி மற்றும் நக்ஷத்திரா (புகைப்படம் - இன்ஸ்டாகிராம்)
நிறைமாத கர்ப்பிணியான சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தொல்லை கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
ஜீ தமிழ் சேனலில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. இதில் வெண்ணிலா எனும் அப்பாவி பெண் கேரக்டரில் நடித்தவர் நக்ஷத்திரா. இவர் கலர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த வள்ளி திருமணம் என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில், நக்ஷத்திரா ஜீ தமிழ் சேனலில் சீரியல்களின் தயாரிப்பு நிர்வாக பணிகளை செய்து வரும் விஸ்வநாதனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த நிலையில் நக்ஷத்திரா தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறினர்.
Advertisment
Advertisements
இந்த நிலையில் நக்ஷத்திராவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வளைகாப்பு நடந்தது. இந்த விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை சைத்ரா ரெட்டி கலந்து கொண்டு தனது தோழியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். யாரடி நீ மோகினி சீரியலில் நடித்தது முதல் சைத்ராவும் நட்சத்திராவும் தோழிகளாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நக்ஷத்திராவுக்கு சைத்ரா ரெட்டி தொல்லை கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து இருவருமே இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
வீடியோவில், நக்ஷத்திரா வயிற்றை சாய்த்து கஷ்டப்பட்டு நடக்கிறார். இதை பார்த்தாலே பரிதாபமாக இருக்கும் நிலையில், சைத்ரா ரெட்டியோ அவரை அப்படியே இமிடேட் செய்து கலாய்க்கிறார். நக்ஷத்திரா தடுமாறி சோபாவில உட்கார செல்லும் போது கர்ப்பிணிக்கு தாராளமாக இடம்விடாமல் ஓடி போய் சைத்ரா உட்கார்ந்து கொள்கிறார்.
பின்னர் நக்ஷத்திரா ஒருவழியாக உட்காருகிறார். அப்போது அவர் காது அருகே ஏதோ காண்பித்து, கடக் கடக் என கடித்து சாப்பிட்டு அவரை வெறுப்பேற்றுகிறார். சரி டயர்ட்டாக இருக்கிறதே என நினைத்து கட்டிலில் ஓய்வெடுக்கலாம் என தலையணைகளை பக்கத்தில் வைக்கிறார் நக்ஷத்திரா. உடனே சைத்ரா ரெட்டி அந்த தலையணைகளை எடுத்து அவர் மீது போட்டு இவர் படுத்துக் கொள்கிறார்.
இருவரும் பெட்ஷீட்டை போர்த்தி கொள்கிறார்கள். அப்போது சைத்ரா ரெட்டி செய்யும் சேட்டைகளை பார்த்து நக்ஷத்திரா கடுப்பாகிறார். பின்னர் நக்ஷத்திராவின் மீது காலை தூக்கி போட்டதும் சரமாரியாக சைத்ராவை செல்லமாக அடிக்கிறார். இந்த வீடியோவை பதிவிட்ட சைத்ரா, "உங்கள் தோழி கர்ப்பிணியாக இருக்கும் போது இதெல்லாம் விளையாட்டுக்காக, நக்ஷத்திரா கர்ப்பிணியாக இருப்பதை பார்ப்பதற்கு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது," என தெரிவித்துள்ளார்.