தமிழில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி. அதன்பிறகு கயல் படத்தில் நடித்து புகழ் பெற்ற இவர், அந்த படத்திற்கு பிறகு கயல் ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சண்டி வீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, மன்னர் வகையாறா, பரியேறும் பெருமாள் போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது டைடானிக் காதலும் கவுந்துபோகும், எங்கே அந்த வான், அலாவுதீனும் அற்புத கேமரா, ஏஞ்சல், ராவணக்கூட்டம் ஆகிய படங்களில் நடித்து வரும் ஆனந்தி, தனது எளிமையான முறையில் நடத்தி முடித்துள்ளார். வரன்கள் என்ற நிகழ்ச்சி தொகுப்பு நிறுவனத்தின் மூலம் குறைந்த செலவில் தனது திருமணத்தை நடத்தியுள்ளர். இந்த திருமணத்திற்கு முக்கியமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனந்தியின் கணவர் பெயர் சாக்ரடீஸ் என்றும், அவர், இயக்குனர் நவீனின் மைத்துனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடிப்பில் தயாராகிவரும் அக்னி சிராகுகலில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் ஆனந்தி நடிப்பில, அலாவுதினின்-அர்புதா கேமரா படத்திலும் இணை இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். இந்த திருமணம் இந்து சடங்குகளுடன் நடந்தது மற்றும் நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இந்த திருமணம் தொடர்பான புகைபடங்களை தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜே.எஸ்.கே சதீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Today at @anandhiactress & #socrates wedding wish couple happy married life with all prosperity @TSivaAmma @pjaijo @NaveenFilmmaker pic.twitter.com/GMQgsiSlcD
— JSK Satishkumar (@JSKfilmcorp) January 7, 2021
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Kayal anandis marriage to co director photo posted on twitter
650 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்; ஆரம்பமானது சென்னை புத்தகத் திருவிழா!
Tamil News Live : கம்யூ. கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலையில் பின்னடைவு!
நெடுமாறன் ராஜாங்கம் ஊருக்கு எப்படி கரெண்ட் வந்தது? வெளியானது நீக்கப்பட்ட காட்சிகள்!
பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் : இன்று புதுச்சேரி வருகிறார் மோடி!
பாகற்காய் ஃப்ரை.. இப்படி செஞ்சா கசப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை!