நடிகை கீர்த்தி சுரேஷ் அம்மா என்னை மாப்பிள்ளைனு கூப்பிட்டாங்க என்று கூறிய பிரபல நடிகர் ஜாலியாக ஒரு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், இவருடைய அம்மா தன்னை மாப்பிள்ளை என்று கூப்பிட்டதாக உண்மையை உடைத்த பிரபல நடிகர் சதீஷின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தனது நடிப்புத் திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களா, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா பிரபலம் என்றாலே கிசுகிசுவுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில், முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பற்றியும் பல கிசுகிசுக்கள் பேசப்பட்டன. அனிருத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. இதனால், இருவரும் காதலிக்கிறார்கள் என்று வதந்தி பரவியது. இப்படி, கீர்த்தி சுரேஷ் பற்றி பல வதந்திகள் உலா வந்தது.
அந்த வரிசையில், ஒரு முறை பைரவா படத்தின் பூஜையின் போது பங்கேற்ற கீர்த்தி சுரேஷ் மற்றும் சதிஷ் புகைப்படத்தை கிராப் செய்து மாலையுடன் இருந்த இருவரையும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர் என்று ஒரு கிசுகிசு வேகமாக பரவி சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து நடிகர் சதீஷ் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் கூறுகையில், ‘அந்த வதந்தி பரவிய போது கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா போன் பண்ணி வாழ்த்துக்கள் மாப்பிள்ளைன்னு சொன்னாங்க, எனக்கே ஷாக் ஆகிடுச்சு.. என்னம்மா சொல்றீங்கன்னு கேட்ட பிறகு தான் அந்த வதந்தி பற்றி எனக்குத் தெரியும் என்று கூறினார்.
முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சதீஷ், ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“