பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்பட கலைஞர்களுக்கு போட்டோ போஸ் கொடுத்தபோது அவர்கள் கீர்த்தி சுரேஷ் பெயரை தவறாக உச்சரித்துள்ளனர்.
Read In English: Keerthy Suresh addressed as ‘Keerthy Dosa’ by photographers, maintains calm to correct them. Watch
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தமிழில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தின் ரீமேக்காக தயாரிக்கப்பட்ட இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரித்திருந்த நிலையில், வருண் தவான் ஹீரோவாக நடித்தார். தமிழில் சமந்தா நடித்த கேரக்டரில் இந்தியில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்த படம் கடந்த டிசம்பர் 25-ந் தேதி வெளியானது.
பாலிவுட் அல்லாத பிரபலங்களின் பெயர்களை நினைவுபடுத்தும் போது மும்பையில் உள்ள புகைப்படக் கலைஞர்கள் சிறந்தவர்கள் அல்ல என்று சொல்வார்கள். ஹாலிவுட் பிரபலங்கள் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவர்களின் பெயர்களை தவறாக உச்சரித்துள்ளனர்ஃ அந்த வகையில் சமீபத்தில் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷை ‘கீர்த்தி தோசை’ என்று குறிப்பிட்டு இனவெறிக் கருத்து தெரிவித்தது நடிகைக்கு எரிச்சலூட்டியது.
பேபி ஜான் படம் வெளியாகும் முன்பே, தனது நீண்டநாள் காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ், கிறிஸ்துமஸுக்கு ஒரு நாள் கழித்து மும்பையில், புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது அவர், டெனிம் உடை அணிந்திருந்த நிலையில், அழகாக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தின் பின்னணியில் போஸ் கொடுத்தபோது புகைப்பட கலைஞர்கள் அவரை போட்டோ எடுத்தனர்.
அப்போது, புகைப்படக் கலைஞர்கள் கீர்த்தி சுரேஷை "கிருதி" என்று அழைக்க, அவர் புன்னகையுடன் அவர்களைத் திருத்தி, "கிருதி இல்லை கீர்த்தி" என்று கூறினார். சிறிது நேரம் கழித்து, மற்றொரு புகைப்படக்காரர் "கீர்த்தி தோசா" என்று அழைத்தார், இதனால் கோபமான கீர்த்தி சுரேஷ், அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமைதியாக, “கீர்த்தி தோசா இல்லை, கீர்த்தி சுரேஷ் என்று கூறினார்.
மேலும், இது கீர்த்தி தோசை அல்ல, கீர்த்தி சுரேஷ். எனக்கு தோசை பிடிக்கும்” தோசை இந்தியாவின் தென்பகுதியில் ஒரு முக்கிய உணவாகும் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, புகைப்படக்காரர்கள் மேலும் போஸ்களைக் கேட்டுக்கொண்டே இருந்தபோது கீர்த்தி சுரேஷ் அழகாக போஸ் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.