நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் நடந்து 20 நாட்கள் கடந்த நிலையில், தங்கத் தாலிக்கு பதிலாக மஞ்சள் கயிறு அணிந்திருப்பது ஏன் என்ற கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12, 2024-ல் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வாரங்களாக பேபி ஜானை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேசஷ திருமணத்திற்குப் பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்த பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும், கீர்த்தி சுரேஷ் கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்திருப்பதை ரசிகர்கள் பார்த்தனர். ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நடிகை கீர்த்தி சுரேஷ், மஞ்சள் கயிறு அணிந்திருப்பது ஏன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நேர்காணலில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், “மஞ்சள் கயிறை நாங்கள் அகற்றக் கூடாது என்பதால், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நான் மஞ்சள் கயிறு அணிந்திருப்பதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை அதை அகற்றக்கூடாது, எனவே அடிப்படையில் சில நாட்களுக்குப் பிறகு, அதை தங்கச் சங்கிலியாக மாற்றுவோம். உங்களுக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் ஒரு நல்ல நாள் இருந்திருந்தால், நான் தங்கச் சங்கிலியை மாற்றி அணிந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டிருந்தோம், அது ஜனவரி இறுதியில் வருகிறது” என்று கூறினார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் மேலும் கூறுகையில், “அதுவரை நான் மஞ்சள் கயிறு அணிந்திருப்பேன். யாரோ ஒருவர் என்னிடம் சொன்னார், நீங்கள் அதை உங்கள் விளம்பர ஆடைகளுடன் அணிய விரும்பவில்லை என்றால் ... அது இங்கே கட்டப்பட்டதற்குக் காரணம் அது உங்கள் மார்பைத் தொட வேண்டும் என்பதற்காகவும். இது புனிதமானது மற்றும் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. நீங்கள் அதை கோல்டன் செயினுக்கு மாற்றினால், அது சாதாரணமாக இருக்கும். உள்ளே கூட வைக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். ஆனால்,அது சூடாக இருக்கிறது என்று நினைத்தேன்.நான் அதை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“