இவ்ளோ நெருக்கமா? அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் பிறந்த நாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

keerthy suresh close with anirudh, music director anirudh ravichander, கீர்த்தி சுரேஷ், அனிருத், கீர்த்தி சுரேஷ் அனிருத் நெருக்கமான புகைப்படம், வைரல், actress keerthy suresh, keerthy suresh wishes anirudh, keerthy suresh anirudh photos goes viral, tamil cinema news, tamil viral news

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் பிறந்த நாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கோலிவுட்டில் தற்போது பிஸியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத், இவர் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்துக்கு இசையமைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாவதற்க்கா காத்திருக்கிறது. மாஸ்டர் படத்தின் பாடல்கள் கொரோனா பொது முடக்கம் அறிவிப்பதற்கு முன்பாகவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இசையமைப்பாளர் அனிருத் அக்டோபர் 16ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். மாஸ்டர் படக் குழுவினர் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குயிட் பண்ணுடா பாடலை வெளியிட்டனர். அந்த பாடல், விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலானது.

அனிருத்தின் பிறந்த நாளில் அவருக்கு மற்றொரு சிறப்பாக தனுஷ் நடிக்கும் 44வது படத்துக்கு அவர் இசையமைக்க ஒப்பந்தமானார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக ஊடகங்களில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். இதில் ஸ்பெஷலாக நடிகை கீர்த்தி சுரேஷ் அனிருத்தின் பிறந்த நாளில் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கீர்த்தி சுரேஷ் அவர் மீது அனிருத் தோள் மீது கைபோட்டு அனைத்தபடி புகைப்படத்தை வெளியிட்டு, அனிருத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு உங்களுக்கு அற்புதமாக இருக்கும். சில மணி நேரங்களில் எனக்கு நீங்கள் திரும்ப வாழ்த்த வேண்டும் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், கீர்த்தி சுரேஷ் தனக்கு பிறந்தநாள் என்பதை தெரிவித்துள்ளார்.

அனிருத்தும் கீர்த்தி சுரேஷும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் கீர்த்தி சுரேஷுக்கும் அனிருத்துக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பகிர்ந்ததால் அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வரைலாகி வருகிறது.

இருவரின் புகைப்படத்தைப் பார்த்த ட்விட்டர் பயனர் ஒருவர் “சம்திங் சம்திங்” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.

மற்றொரு ட்வீட் பயனர் “ஒருவேளை அதா இருக்குமோ” என்று பதிவிட்டுள்ளார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தவர்கள் வாழ்த்து தெரிவித்ததோடு இவ்ளோ நெருக்கமா என்று இருவரைப் பற்றி கிசுகிசுக்களையும் பேசி வருகின்றனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Keerthy suresh close with anirudh ravichander photos goes viral

Next Story
சிங்கம் போல ஸ்ட்ரென்த் ‘அனிதா’, அட்வைஸுக்கே அட்வைஸா? – பிக் பாஸ் விமர்சனம்Bigg Boss 4 Tamil Kamal Hassan Aari Anita Archana Review Day 13
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express