தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிரம் ரீ்ல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன்பிறகு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த, சாணி காகிதம், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ’சர்காரு வாரி பட்டா’, ரங் தே, குட்லக் சாகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்கை வரலாறு திரைப்படமாக மகாநதி திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளியிப்படுத்தியதற்காக தேசிய விருது பெற்றார்.
மேலும் இவரது நடிப்பில், மிஸ் இந்தியா மற்றும் பென்குயின் ஆகிய ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவசாக இருக்கும் கீர்த்திசுரேஷ் அவ்வப்போது தனது ஸ்டைலிஷான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அவர் தனது புதிய முயற்சியாக முதன் முறையாக இன்ஸ்டாகிராம் ரீலில் நடனமாடி பதிவிட்டிருக்கிறார்.
டோண்ட் ரஷ் என்ற ட்ரெண்டிங் ரீமிக்ஸ் பாடலுக்கு இன்ஸ்டாகிராம் ரீலில் அசத்தலாக டான்ஸ் ஆடியிருக்கிறார். மேலும் இந்த ரீல்ஸ்-ல் ’சும்மா கேஷுவலா தம்பியுடன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த வீடியோவுக்கு தற்போது வரை 7.20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ள நிலையில், இந்த பதிவு தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”