Advertisment

கீர்த்தி சுரேஷ்-க்கு இப்படி ஒரு ராசி: இவரோடு நடிச்ச ஹீரோஸ் 2 மாநிலங்களில் துணை முதல்வர்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நடித்த இரண்டு ஹீரோக்கள் இப்போது இரண்டு மாநிலங்களில் துணை முதல்வர்கள்; நெட்டிசன்கள் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

author-image
WebDesk
New Update
Keerthy Suresh

கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த இரண்டு ஹீரோக்கள் தற்போது துணை முதல்வர்களாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisment

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னாள் நடிகை மேனகாவின் மகளான இவர் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானார்.
தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானவர், தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மகாநடிகை படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பாராட்டப்பட்டது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளப் படங்களிலும் கீர்த்தி சுரேஷ் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த இரண்டு ஹீரோக்கள் தற்போது துணை முதல்வர்களாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் நீண்ட நாள் ஊகங்களுக்கு முடிவு கட்டும் வகையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகியுள்ளார். செப்டம்பர் 29 ஆம் தேதியான இன்று, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறையின் அமைச்சராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். 

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனதை அடுத்து, அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ்தான் காரணம் என சிலர் இணையத்தில் கூறி வருகின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷும்  உதயநிதியும் ஒன்றாக ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தனர். இந்த படம்தான், முழு நேர அரசியலுக்கு வருவதற்கு முன்னர் உதயநிதி நடித்த கடைசி படமாகும். இப்போது உதயநிதி துணை முதல்வராகி விட்டார். 

இதே போல கீர்த்தி சுரேஷ், தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். அந்த படம் 2018 ஆம் ஆண்டில் வெளியானது. பவன் கல்யாண் தற்போது ஆந்திராவின் துணை முதலமைச்சராக அவர் பதவி வகிக்கிறார். இதனால் கீர்த்தி சுரேஷின் ராசியால், இருவரும் துணை முதலமைச்சர் ஆனதாக பலர் சில மீம்ஸ்களை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

அதேநேரம் நடிகை நயன்தாராவும், தற்போது ஆந்திரா மற்றும் தமிழ் நாட்டின் துணை முதலமைச்சர்களாக பதவி வகிக்கும் பவன் கல்யாண்-உதயநிதியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அப்படிப்பார்த்தால், அவரும் ராசியான நாயகிதான் என சிலர் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Keerthy Suresh Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment