தென்னிந்திய சினிமா உலகில் திருமண சீசன் தொடர்ந்து ரசிகர்கள் மத்தயில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த திருமண பபட்டியலில் இணைந்த சமீபத்திய பிரபலம் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் தனது நீண்டகால காதலரும் தொழிலதிபருமான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ள கீர்த்தி சுரேஷ், #ForTheLoveOfNyke என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்டுள்ளார்.
Read In English: Keerthy Suresh wears madisar sari as she weds Antony Thattil in traditional Tamil ceremony; we break down her look
இந்த திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், பாரம்பரியமான தமிழ் பிராமண ஐயங்கார் கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார். இதற்காக கீர்த்தி, ஐயங்கார் கட்டு பாணியில் கட்டப்பட்ட ஒன்பது கெஜ புடவையில் நேர்த்தியான மடிசார் அணிந்தார், அதே நேரத்தில் ஆண்டனி ஒரு வேஷ்டி கட்டியிருந்தார். மடிசரின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகையில், சென்னையில் பிறந்த தமிழரான விஜயா சுவாமிநாதன், திருமணத்திற்குப் பிந்தைய தமிழ் பிராமணப் பெண்களுடன் இந்த ஆடை அலங்காரம் பொதுவாக தொடர்புடையது என்று விளக்கினார்.
இது ஒரு பாரம்பரிய பாணியாக இருந்தாலும், தென்னிந்தியா முழுவதும் இதில் மாறுபாடுகள் உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள நவ்வரி அல்லது தெலுங்கு பிராமணத் திரை போன்றவை. இன்றைய காலக்கட்டத்தில் மடிசர் அரிதாகவே தினசரி அணியப்பட்டாலும், பண்டிகை மற்றும் மத நிகழ்வுகளுக்கு இது ஒரு முக்கிய தேர்வாக உளள்து. அதேபோல் கீர்த்தியின் மணப்பெண் தோற்றம் பாரம்பரிய பரதநாட்டிய நகைகளால் வடிவமைக்கப்பட்டது குறித்து சுவாமிநாதன் கூறுகையில், பல்வேறு நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட ஆபரணங்களை உள்ளடக்கியது என்று கூறியுள்ளார்.
ஆர்ம்லெட் (வாங்கி): மேல் கையில் அணிந்து, மணப்பெண்ணின் ராஜ தோற்றத்தைக் கூட்டுகிறது.
அத்திகை மற்றும் ஹாரம்: குட்டையான மற்றும் நீண்ட நெக்லஸ்கள் மணமகளின் அழகை மேம்படுத்தின.
மாங்கா டிக்கா அல்லது நெட்டி சுட்டி: நெற்றி அணிகலன்கள் அவள் முகத்தை அழகாக வடிவமைக்கின்றன.
ஒடியானம் (பெல்ட்): புடவையை தன் தோற்றத்தின் பிரமாண்டத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான சேர்க்கை.
ராக்கோடி, சூர்யா மற்றும் சந்திர பிறை: மங்களம் மற்றும் வான ஆசீர்வாதங்களைக் குறிக்கும் அவளது தலைமுடிக்கான அலங்காரங்கள்.
இந்த பாரம்பரிய துண்டுகள் கீர்த்தி சுரேஷின் திருமண உடையின் கலாச்சார செழுமையையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலித்தன. ஆன்டனியுடன் கீர்த்தியின் உறவால் பலர் ஆச்சரியப்பட்டனர், ஏனெனில் நடிகை எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எங்கும் குறிப்பிட்டதே இல்லை. 2013 இல் பிரியதர்ஷனின் கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் கீர்த்தி சினிமாவில் அறிமுகமாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இருவரும் 15 வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக இருக்கிறார்கள் .
தற்போது இவர்கள் திருமணம் செய்துகொண்ட நிலையில், ரசிகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சமூக வலைதளங்களில் வாழ்த்துச் செய்திகளால் நிரம்பி வழியும் நிலையில், கீர்த்தி தனது பாரம்பரியத்தைத் தழுவியிருப்பது இந்திய பாரம்பரியங்களின் அழகைப் பாராட்ட பலரைத் தூண்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.