சாவித்திரியின் பயோக்ராஃபி படமாக வெளிவந்த நடிகையர் திலகம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சாமி 2 – வை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் நடிப்புக்கு இலக்கணமாக வாழ்ந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் வெளிவந்த இந்த படம் திரையில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்திருந்தார் என்பதை விட வாழ்ந்து இருந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். திருமணத்திற்கு பிறகு வரும் தோற்றத்தில் கீர்த்தியா? சாவித்திரியா? என்பது போலவே பல சமயங்களில் படம் பார்த்தவர்கள் குழம்பினர். அந்த அளவிற்கு படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது.
இதற்கு முன்பு வெளிவந்த பைரவா, தொடரி போன்ற படங்களில் கீர்த்தி பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றிருந்தாலும், நடிகையர் திலகம் அவரை முழுமையாக ரசிகர்களிடம் ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது. படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் கீர்த்தி சுரேஷை மனதார வாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான், தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாமி2, சண்டக்கோழி2 ஆகிய படங்கள் ரீலீஸுக்கு தயாராகியுள்ளனர். இதனால் கீர்த்தி ரெட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.பிரமாண்ட வெற்றிக்கு பிறகு வெளிவரும் திரைப்படங்கள் என்பதால் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலூங்கி வருகின்றன.
சாமி 2 படத்தில் நடிகர் விக்ரமுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி. இந்த படத்தின் ஸ்டில்ஸ்கள் கூட இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளனர். கூடவே, படத்தின் மோஷன் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.