Keerthy Suresh Penguin review rating, penguin amazon prime release
மனோஜ் குமார்
Advertisment
Keerthy Suresh: புகழ்பெற்ற நடிகை சாவித்ரியின் வாழ்க்கைப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ’மகாநடி’-யில் நடித்து, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றதிலிருந்து தான் இன்னும் நிறைய பொறுப்புகளை சுமக்க வேண்டும் என கீர்த்தி சுரேஷ் உணர்கிறார். அதன்படி தனித்து நிற்கும் மற்றொரு திரைப்படத்தில் நடிக்க, அவருக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
“மகாநடி வெளியான பிறகு, எனக்குப் பிடித்த ஸ்கிரிப்டை செலெக்ட் செய்ய ஆறேழு மாதங்கள் ஆனது. தெலுங்கில் மகாநடி எனக்கு எப்படி இருந்ததோ, அதே போல சிறந்த பெண்ணை மையமாக வைத்த படத்தை நான் தமிழில் தேடிக்கொண்டிருந்தேன். ஆகையால் பென்குயினை சந்திக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது” என்றார் கீர்த்தி.
Advertisment
Advertisements
’பென்குயின்’ தமிழ்-தெலுங்கில் உருவாகியிருக்கும் இருமொழி படம். இதை அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் எழுதி இயக்கியிருக்கிறார். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸின் கார்த்திக் சுப்பராஜ், பேஷன் ஸ்டுடியோஸுடன் இணைந்து இதனைத் தயாரித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ஏற்கனவே மூவி பஃப்ஸின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
சைக்காலஜிகல் த்ரில்லர் எனக் கூறப்படும் இந்தப்படம், ஒரு குழந்தையை மனநோயாளியின் பிடியிலிருந்து மீட்க ஒரு தாயின் போராட்டத்தைப் பற்றி கூறுகிறது.
“நான் ஈஷ்வரின் கதையை நேசித்தேன். அவர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்கிரிப்டை என்னிடம் விவரித்தார். இன்னும், இது நான்கு மணிநேர நீளமான கதை என்று என்னால் உணர முடியவில்லை. த்ரில்லர் வகையில் நான் இதற்கு முன் எந்தவொரு படமும் நடிக்கவில்லை. படம் முற்றிலும் தாய்மையைப் பற்றியது. அநேகமாக, திரைப்படத்தின் முடிவில், ஒவ்வொரு தாயும் நான் ஒரு சூப்பர் ஹீரோ என்று உணர்வார்கள்” என்று கீர்த்தி indianexpress.com -இடம் கூறினார்.
இருப்பினும், பெரிய திரையில் பென்குயின் படத்தைப் பார்ப்பதை தான் தவறவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். "எல்லாவற்றிற்கும் நன்மை மற்றும் தீமைகள் உள்ளன. நான் தவறவிடுவதற்கான முக்கிய விஷயம் ‘தியேட்டர் ஃபீல்.’ ஒரு த்ரில்லர் படமாக இருப்பதால், அதை தியேட்டரில் பார்ப்பது முற்றிலும் மாறுபட்டது (அனுபவம்). மறுபுறம், OTT மேடையில் இருப்பதன் பெரும் நன்மைகள் உள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.
அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படும் இரண்டாவது பெரிய தமிழ் திரைப்படம் பென்குயின். COVID-19 நிலைமை இந்தியா முழுவதும் கடுமையாக இருப்பதால், சினிமா அரங்குகள் எப்போது வணிகத்திற்காக திறக்கப்படும் என்று சொல்ல முடியாது. இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
"எனது படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகின்றன. இந்த கட்டத்தில், பூட்டுதலின் போது, என் படம் வெளியாவது மிகப்பெரியது. எல்லாமே ஒரு நல்ல காரணத்திற்காகவே நடக்கும் என்று நான் எப்போதும் நினைக்கிறேன், இது அநேகமாக அவற்றில் ஒன்றாக இருக்கும்” என்றும் கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டார்.
கடந்த மாதம், ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரே நாளில் இப்படம் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. இதற்கிடையில், பென்குயின் ஜூன் 19 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்கை தொடங்குகிறது.