Penguin Teaser: நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து விரைவில், வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘பென்குயின்’. இந்தப் படத்தின் டீஸர் திங்கள்கிழமை வெளியானது. தமிழில் த்ரிஷாவும், மலையாளத்தில் மஞ்சு வாரியரும், தெலுங்கில் சமந்தாவும், இந்தியில் டாப்ஸியும் இந்த டீசரை இணையத்தில் வெளியிட்டனர். கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லாக்டவுனில் இருக்கிறது. இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் தயாரிப்பாளர்களின் கவனம் OTT பக்கம் திரும்பியிருக்கிறது.
இந்நிலையில் (அமேசான் பிரைம் வீடியோவில்) OTT-யில் வெளியாகும் இரண்டாவது உயர்மட்ட தமிழ் படம் பெண்குயின். கடந்த மாதம், தியேட்டர்கள் மீண்டும் திறக்காததால், ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ அமேசான் பிரைம் வீடியோவில் முதல் படமாக வெளியானது.
ஸ்ட்ரீமிங் தளத்தைத் தவிர, ’பென்குயின்’ மற்றும் ’பொன்மகள் வந்தாள்’ ஆகிய 2 படங்களுக்கும் பொதுவான விஷயங்கள் இருப்பதாகத் தெரிகிறது. இரண்டு திரைப்படங்களிலும் பெண்கள் தான் முன்னணி கதாநாயகிகள். ஒரு குழந்தை கடத்தலை மையப்படுத்தியுள்ளது. தாயின் போராட்டங்களையும் வேதனையையும் திரையில் காட்டுகிறது. சுவாரஸ்யமாக, வண்ணம் மற்றும் லொகேஷன், ’பெண்குயின்’ மற்றும் ‘பொன்மகள் வந்தாள்’ ஆகியப் படங்கள் ஒரே மாதிரியாக உள்ளன.
Advertisment
Advertisements
தயாரிப்பாளர்கள் ஏன் அரை நீர்வாழ் பறவையான ‘பென்குயின்’ பெயரை படத்திற்கு வைத்தார்கள் என்று ஆராய்ந்தால், அவைகள் மிகவும் அர்ப்பணிப்புள்ள பெற்றோர் வகையைச் சேர்ந்தவை. தங்கள் சந்ததிகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் அனைத்து விதமான கடினமான பிரச்னைகளையும் பென்குயின்கள் தாங்குகின்றன.
கீர்த்தி சுரேஷ் காணாமல் போன குழந்தையின் தாயின் வேடத்தில் நடிக்கிறார். முகமூடி அணிந்த மனநோயாளியால் குழந்தை கடத்தப்படுவது போல் தெரிகிறது. அந்த தாய் தனது குழந்தையை மீட்பாளா? அல்லது தன் வாழ்க்கையை நாசமாக்கிய மனநோயாளியை பழிவாங்குவாளா? என்பதே கதை. தயாரிப்பாளர்கள் சொல்வது போல், பென்குயின் “ஒரு தாயின் கதை.”
ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கியுள்ள இப்படம், அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜூன் 19-ம் தேதி வெளியாகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”