மணிரத்னமா? சூப்பர் ஸ்டாரா? முடிவெடுத்த கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Keerthy Suresh, Keerthy Suresh quits Ponniyin Selvan movie,கீர்த்தி சுரேஷ், பொன்னியின் செல்வன், மணிரத்னம், ரஜினிகாந்த், Keerthy Suresh quits from Mani Ratnam's Ponniyin Selvan movie,தலைவர் 168, Mani Ratnam's Ponniyin Selvan, Rajini's thalaivar 168
Keerthy Suresh, Keerthy Suresh quits Ponniyin Selvan movie,கீர்த்தி சுரேஷ், பொன்னியின் செல்வன், மணிரத்னம், ரஜினிகாந்த், Keerthy Suresh quits from Mani Ratnam's Ponniyin Selvan movie,தலைவர் 168, Mani Ratnam's Ponniyin Selvan, Rajini's thalaivar 168

நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் அண்மையில் நடித்து வெளியான நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நடிகையர் திலகம் பெரிய அளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. இதில், சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்குகிறார். இந்தப் படத்தில் தமிழ், இந்தி சினிமாவைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் பிற்காலச் சோழ அரசனான ராஜராஜ சோழன் காலத்து வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தில், விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மிகப் பிரம்மாண்டமாக தயாரிப்பில் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இந்தப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க சம்மதித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 168 வது படம் என்பதால் தற்காலிகமாக அந்தப் படத்துக்கு தலைவர் 168 என்று பெயரிடம்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகிருந்தது. இரு படத்தின் கால்ஷீட்கலூம் ஒரே நேரத்தில் வந்ததால், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழக்க விரும்பாத கீர்த்தி சுரேஷ் மணிரத்னம் படத்திலிருந்து விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து எந்த விலக்கமும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பென்குயின் படத்தில் தனது உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். அதே போல, இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் மைதான் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Keerthy suresh quits director mani ratnams ponniyin selvan movie for opportunity of rajinis thalaivar

Next Story
காஜல் அகர்வால் – பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்Sita movie, kajal aggarwal,It's My Life on tamilrockers, tamilrockers leaked It's My Life (Sita) on tamilrockers, இட்ஸ் மை லைஃப் சீதா, காஜல் அகர்வால், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், It's My Life (Sita) full movie on tamilrockers, தமிழ் ராக்கர்ஸ், It's My Life full movie on tamilrockers, kajal aggarwal
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com