சிறுவயதிலிருந்தே தனக்கு சேலைகள் அணிவது விருப்பம் என்றும் ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்பு படிக்கும் போதே கண்ணாடி முன் நின்று சேலை அணிந்து ரசித்ததாகவும் கோவையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வரமகாலட்சுமி சில்க்ஸின் 55-வது கிளையை பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் துவக்கி வைத்தார்.
பின்னர் கீர்த்தி சுரேஷ் அங்கு இருந்த உயர்தர வடிவமைப்புகள் கொண்ட பனாரஸ், காஞ்சிபுரம், பட்டோலா, ஐகாட், ஆர்கன்சா மற்றும் குப்பம் வகை சேலைகளை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கீர்த்தி சுரேஷ், ”கோவைக்கு முதல் முறையாக திறப்பு விழாவிற்கு வருகை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. திறப்பு விழாவிற்காக வந்த நான் வாடிக்கையாளராக மாறி சில சேலைகளை வாங்கிவிட்டேன்.
5-ம், 6-ம் வகுப்பு படிக்கும் போது கண்ணாடிக்கு முன் நின்று சேலை அணிந்து ரசித்து பார்த்தவள் நான். சேலை கட்டுவது நமது கலாச்சாரத்தை முன்னிறுத்துகிறது. இதுபோல் திறப்பு விழாவிற்கு வரும் போது சேலைகளை அதிகளவு வாங்குகிறேன். சில சமயம் அம்மாவிடம் இருந்து சேலையை சுட்டு விடுவேன்.
தற்போது ரகு தத்தா, ரிவால்வர் ரீட்டா, சைரன் போன்ற படங்களில் நடித்து வருகிறேன். ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் என்ற படத்தில் நடித்து வருகிறேன். தற்போதுள்ள காலகட்டத்தில் கைத்தறி புடவை மதிப்பு குறைந்துள்ளது. அதனை ஊக்குவிக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். கலாச்சாரம் அழிந்து வருவதை தடுக்க வேண்டும்,” இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“