தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கீர்த்தி.
பின்னர் மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து தனுஷ் ஜோடியாக தொடரி, சிவகார்த்திகேயன் உடன் ரஜினிமுருகன், ரெமோ படங்களில் நடித்தார்.
ரஜினிகாந்த், விஜய் ஜோடியாகவும் நடித்து பிரபலமடைந்தார். மகாநதி படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
இந்நிலையில், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் நண்பர், காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் இரண்டாவது வாரத்தில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆண்டனி துபாயை சேர்ந்த தொழிலதிபர் என்றும், இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் கீர்த்திக்கும் ஆண்டனிக்கும் கோவாவில் டெஸ்டினேஷன் திருமணம் நடைபெறவுள்ளது. ஆண்டனி, கீர்த்தி இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பு படித்துள்ளனர்.
இருவீட்டு குடும்பத்தார் ஆசியுடன் திருமணம் கோவாவில் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பிரமாண்டமாக திருமணம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“