படம் வேறு மாதிரியாக இருக்கும், நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக நடத்துள்ளேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’ படம் குறித்து பேசியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “ மாமன்னன்’படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது “ இதுபோன்ற பெரிய படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழித்து, தமிழியில் பெரிய வரவேற்பு கிடைக்கும் படம் வெளியாக இருக்கிறது. உதயநிதி, மாரிசெல்வராஜ், பகத் பாசில், ஏர்.ஆர். ரகுமான் இசையில் நடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. படத்தில் எனது கதாபாத்திரம் வேறு மாதிரியாக இருக்கும். நான் ஒரு கம்யூனிஸ்ட். எல்லா பெண்களாலும் தங்களை இந்த கதாபாத்திரத்தோடு தொடர்படுத்திக்கொள்ள முடியும்.
பகத் பாசில் அவர்களுடன் எனக்கு குறைந்த காட்சிகளே உள்ளது. வடிவேலு மற்றும் உதயநிதி இருவரும் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் படம் அப்படி இருக்காது. ரொம்ப ஆழமான அம்சங்கள் கொண்ட படம். சமூக நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. வடிவேலு மற்றும் உதயநிதி உடன் வேலை செய்வது ஜாலியாக இருந்தது. ஆனால் இயக்குநர்தான் பாவம். என்னை திருமணம் செய்து அனுப்பவதில் ஏன் இவ்வளவு ஆர்வம். நடக்கும்போது நானே சொல்லிறேன்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“