கனவு பலித்தது: சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh: இதில் குஷ்பு மற்றும் மீனாவின் பெயர்கள் அதிகம் அடிப்பட்டன. 

Keerthy Suresh: இதில் குஷ்பு மற்றும் மீனாவின் பெயர்கள் அதிகம் அடிப்பட்டன. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress keerthy suresh, quarantine partner

நடிகை கீர்த்தி சுரேஷ்

Superstar Rajinikanth's Thalaivar 168 : நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார் ’படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.

Advertisment

தர்பார் படத்தில் ஆதித்யா அருணாசலம் என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, பிரதீக் பப்பர் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.

இதற்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கிடையே இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் வெகுவாக இருந்து வந்தது. இதில் குஷ்பு மற்றும் மீனாவின் பெயர்கள் அதிகம் அடிப்பட்டன.

Advertisment
Advertisements

இந்நிலையில் தற்போது தலைவர் 168 படத்தின் ஹீரோயின் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ். அதன்படி இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

Rajinikanth Keerthy Suresh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: