Superstar Rajinikanth’s Thalaivar 168 : நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார் ’படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.
தர்பார் படத்தில் ஆதித்யா அருணாசலம் என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, பிரதீக் பப்பர் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.
We are delighted to announce that for the first time, @KeerthyOfficial will be acting with Superstar @rajinikanth in #Thalaivar168
@directorsiva#KeerthyInThalaivar168 pic.twitter.com/sy4uba5DNd— Sun Pictures (@sunpictures) December 9, 2019
இதற்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கிடையே இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் வெகுவாக இருந்து வந்தது. இதில் குஷ்பு மற்றும் மீனாவின் பெயர்கள் அதிகம் அடிப்பட்டன.
இந்நிலையில் தற்போது தலைவர் 168 படத்தின் ஹீரோயின் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ். அதன்படி இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Keerthy suresh thalaivar 168 superstar rajinikanth sun pictures
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி