பாலிவுட்டில் கால் பதிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்? தகவல்கள் கூறுவது என்ன?

மலையாளம், தமிழ், தெலுங்கு என பெரிய நடிகர்களின் படங்களில் வரிசை கட்டி நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் ஒரு பயோபிக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தயாரிப்பில் உருவாகவுள்ள ஒரு கால்பந்து பயிற்சியாளரின் பயோபிக்கில் இவர் கமீட் ஆகியுள்ளார் என்ற செய்தி சில தகவல் வட்டாரங்கள் மூலம் வருகிறது. பாலிவுட் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் 1950களில் மெல்போர்னில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணியை ஆசியாவிலேயே முதல் நாடாக […]

actress keerthy suresh, quarantine partner
நடிகை கீர்த்தி சுரேஷ்

மலையாளம், தமிழ், தெலுங்கு என பெரிய நடிகர்களின் படங்களில் வரிசை கட்டி நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் ஒரு பயோபிக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தயாரிப்பில் உருவாகவுள்ள ஒரு கால்பந்து பயிற்சியாளரின் பயோபிக்கில் இவர் கமீட் ஆகியுள்ளார் என்ற செய்தி சில தகவல் வட்டாரங்கள் மூலம் வருகிறது.

பாலிவுட் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்

1950களில் மெல்போர்னில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணியை ஆசியாவிலேயே முதல் நாடாக செமிஃபைனல் வரை கொண்டு சென்ற கால்பந்தாட்ட பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீம் என்பவர்ன் பயோபிக்கில் சையத் அப்துல் ரஹீமாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

இந்த படத்தில், அஜய்தேவ்கனுக்கு இணையான வலுவான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகையர் திலகம் பயோபிக்கை தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ், அடுத்த பயோபிக்கில் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.

ஸ்ரீதேவி, அசின், தமன்னா, இலியானா, கங்கனா, பிரியங்கா சோப்ரா என தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் தடம் பதித்த நடிகைகளின் லிஸ்டில் கீர்த்தி சுரேஷும் இணையவுள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Keerthy suresh to act in bollywood

Next Story
தமிழ் சினிமாவில் பெண்களுக்காக வந்த இந்த படங்கள் எப்பவுமே ஸ்பெஷல் தான்!women's day special
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com