New Update
/
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் கண்ணாடி போல மஞ்சள் சேலையில் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை என்றால் தற்போது அவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன், உதயநிதி என நட்சத்திர நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் கீர்த்தி சுரேஷ் நடித்த லீலா கதாபாத்திரம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ் மிகவும் இயல்பாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முத்திரை பதித்த கீர்த்தி சுரேஷ், கோலிவுட், டோலிவுட்டைத் தாண்டி, பாலிவுட் சென்றிருக்கிறார். ஆம், நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்து ஹிந்தியில் வருண் தவான் படத்தில் நடிக்கிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் வருண் தவான் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை அட்லீ தான் தயாரிக்கிறார்.
தற்போது VD18 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் பூஜைக்காக கீர்த்தி சுரேஷ் மஞ்சள் நிற சேலையில் அழகாக சென்றிருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களில், கீர்த்தி சுரேஷ், கண்ணாடி போல மஞ்சள் சேலையில் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் அணிந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த க்யூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கல் மற்றும் நெட்டிசன்கள் அவர் பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்ட வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.