Advertisment

Saamy Square Box Office Collection Day 1: சாமி 2 முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

Saamy 2 Box Office Collection Day 1: விக்ரமின் முந்தைய படங்களைவிட சாமி 2 பொருளாதார ரீதியில் லாபம் அதிகமில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
1st Day Box Office Collection of Saamy Square Movie, சாமி 2, முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன், சாமி 2 முதல் நாள் வசூல்

First Day Box Office Collection of Saamy 2: சாமி 2, முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன், சாமி 2 முதல் நாள் வசூல்

Saamy 2 Tollywood Box Office Collection Day 1: சாமி 2 நேற்று (செப்டம்பர் 21) வெளியானது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் இது! சாமி 2 பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்கள் இவை:

Advertisment

சாமி 2 ஹரியின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் நேற்றைய ஒரு நாளில் கலவையாக வந்த விமர்சனத்தால் வசூலும் சராசரியாகவே இருந்தது. விக்ரமின் முந்தைய படங்களைவிட சாமி 2 பொருளாதார ரீதியில் லாபம் அதிகமில்லை. அதேசமயம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்காது என்றே தயாரிப்புவட்டாரங்கள் கூறுகின்றன.

முதல் நாள் முடிவில் தமிழகம் முழுவதும் 6.9 கோடியும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் 3.3 கோடியும் வெளிநாடுகளில் 5.7முதல் 6 கோடியும் வசூல் செய்து 16.20 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் நாள் வசூல் உலகம்முழுவதும் 10.8 கோடி முதல் 11கோடிவரை இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. மூன்று நாள் முடிவில் 30 கோடிகளை வசூல் செய்தால் சாமி 2 தயாரிப்பு ரீதியாக தோல்வி படம் என்னும் நிலையிலிருந்து மீளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30கோடிகளை தொட சுலபமாக வாய்ப்பிருப்பதாகவே நம்பப்படுகிறது.

ஆனால் படம் தொடர்ந்து அடுத்த வாரம் என்ன நிலையில் செல்லும் என்பதை வார வேலை நாட்களில் தான் அறியமுடியும். இதற்கிடையில் கடந்தவாரம் வெளியான சீமராஜா திரைப்படம் சாமி 2 அளவிற்கு காட்சிகளை மெய்ன்டெய்ன் செய்வதும், மல்டிப்ளக்ஸ் எனப்படும் காம்ளக்ஸ்களில் மீண்டும் காட்சிகளை கூட்டுவதும் சாமி 2-ன் வசூலை பாதிக்கலாம்!

முன்னதாக வந்த நிலவரம் கீழே!

தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பில் ஹரி, விக்ரம் கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் சாமி 2. 2003-ல் ரஜினி படத்திற்கு பிறகு மிகப் பெரிய வசூல் சாதனையை செய்த படம் சாமி.

முதல் பாக அதகள வெற்றியால் அமர்க்களப்பட்டிருக்கவேண்டிய சாமி 2, முதல் காட்சி அடிப்படையில் முதல் பாகத்தை ஈடுகட்டமுடியாத நிலையில்தான் இருக்கிறது. இதனால் எதிர்பார்த்த வசூலை அடுத்தடுத்த நாட்களில் அள்ளமுடியுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

விடுமுறை தினம் என்பதாலும், வீக் எண்ட் என்கிற வார இறுதி நாட்கள் என்பதாலும், பள்ளி காலாண்டு விடுமுறை என்பதாலும் படம் ஓரளவு வசூலை எட்டலாம் என்பதே பலரது கணிப்பாக இருந்தது. பெட்டர் தன் அதர் மூவி அடிப்படையில் சீமராஜா இரண்டாவது வாரமும் 380 தியேட்டர்களில் தொடர்வது சாமி 2-விற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.

ஆனாலும் கமர்ஷியல் கிங் ஹரியின் சாமி முதல்பாக வெற்றியின் தாக்கம் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பை எதிர்மறை விமர்சனங்களை தாண்டியும் பார்வையாளர்களை கொடுத்துள்ளது ஆறுதல். சாமி 2 படம் 470 திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் பட்சத்தில் முதல் நாள் வசூல் தமிழகம் முழுவதும் 6 முதல் 7.5கோடிவரை இருக்கலாம். முழு விவரம் தெளிவாக இன்னும் அவகாசம் தேவை என்பதே இப்போதைய நிலவரம்

கர்நாடகா, கேரளா, ஆந்திரா, எப் எம் எச் எனப்படும் வெளிநாட்டு வெளியீடுகள் மொத்தம் 1258 தியேட்டர்களில் அமெரிக்காவிலும் பல நாடுகளிலும் வெளியானது. அதன் தோராய கலக்ஷ்ன் ரிப்போர்ட் இப்படி இருக்கலாம்.

மற்ற மாநிலங்களில் கேரளா, கர்நாடகாவை சேர்த்து 2 கோடிகளும், ஆந்திராவில் 2.3 கோடிகள், வெளிநாடுகளில் 5.9 கோடிகளும் சேர்த்து உலகம் முழுவதும் முதல் நாள் 18 கோடிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்று நாட்களின் முடிவில் உலகம் முழுவதும் 30 கோடிகள் வரை வசூலிக்கலாம் என்று விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து இரண்டாவது வாரம் வரவேற்பை பொறுத்து வசூல் கூடலாம்.

திராவிட ஜீவா

(அரசியல் மற்றும் சினிமா விமர்சகராக இயங்கி வருபவர், திராவிட ஜீவா)

..

Hari Keerthy Suresh Saamy 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment