கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தி ஃபேமிலி மேன், ஃபார்ஸி இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், ’இயக்குநர் சுமன் கதையை சொன்னார். முழுவதும் கேட்ட பின்னர் அவரிடம் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுடைய அணுகுமுறை நன்றாக இருக்கிறது. இதற்கு முன்னால் இப்படி ஒரு திரைக்கதையை நான் கேட்டதில்லை. அதனால் ரகு தாத்தாவில் நடிக்கிறேன் என்று சொன்னேன்
சுமன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நான் நடித்திருக்கிறேன்.
படத்தில் தாத்தா- பேத்தி இடையான கெமிஸ்ட்ரியும் இருக்கிறது. அதுவும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
இந்தப் படம் ஒரு காமெடி டிராமா. டீசரில் நீங்கள் பார்க்கும்போது படம் ‘இந்தி திணிப்பு’ பற்றியது என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள்.
நான் நடித்த ஹிந்திப் படமான பேபி ஜான் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் நேரத்தில், ஹிந்தி திணிப்புக்கு எதிரான ரகு தாத்தா படத்தில் நடித்திருப்பதைப் பற்றி பலரும் கேட்டனர். இந்தப் படம் பெண்கள் மீதான திணிப்பை பேசுகிறது. அதில், இயக்குநர் ஹிந்தியைக் கையில் எடுத்திருக்கிறார்
இது ஒரு சிறிய மெசேஜ் சொல்லும் படம். ஆனால் பிரச்சாரமாக இருக்காது. இதில் அரசியல் சர்ச்சைகள் எதுவும் இருக்காது. சிரித்து மகிழக்கூடிய படமாக இருக்கும், என்று கீர்த்தி சுரேஷ் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“