Advertisment
Presenting Partner
Desktop GIF

பண மோசடி வழக்கு : மஞ்ஜூமல் பாய்ஸ் பட தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

மலையாளத்தில் வெளியான மஞ்ஜூமல் பாய்ஸ் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manjumel Boys

மஞ்ஜூமல் பாய்ஸ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மஞ்ஜூமல் பாயஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது பண மோசடி புகார் எழுந்துள்ளதால், அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட மஞ்ஜூமல் பாய்ஸ் திரைப்படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ந் தேதி வெளியான இநத படம்கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டது.

கேரளாவில் வெளியான இந்த படம் தமிழகத்திலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படம் வெளியான புதிதில், பட குழுவினர்,  குணா படத்தின் நாயகன் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றிருந்த நிலையில், அடுத்து நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தனர். இப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை வீட்டுக்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார்.

மஞ்ஜூமல் பாய்ஸ் படம் 220 கோடிக்கு அதிகமாக வசூலித்து பெரிய சாதனை படைத்த நிலையில், அரூர் பகுதியை சேர்ந்த சிராஜ் வலியத்தாரா என்பவர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மஞ்ஜூமல் பாயய்ஸ் படத்திற்காக தான் 7 கோடி கடன் கொடுத்தாகவும்,படம் வெளியானவுடன், வரும் லாபத்தில் 40 சதவீதம் கொடுப்பதாக உறுதி அளித்தனர். படம் வெளியாகி ரூ220 கோடி வசூலித்த நிலையில், பேசியபடி பணத்தை கொடுக்கவில்லை நான் முதலீடு செய்த பணத்தையும் கொடுக்கவில்லை.

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான, பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மஞ்ஜூமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்கை முடக்கி உத்தரவிட்டது. மேலும் தயாரிபாளர்கள் மூவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யவும் உத்தவிடப்பட்டது. இதனிடையே கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மஞ்ஜூமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் படத்தின் நாயகனுமான சௌபின் ஷாகிரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் படத்தின் வசூலாக ரூ220 கோடியில் ஏதேனும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment