மலையாள திரையுலகில் 2024-ம் ஆண்டு ரூ700 கோடி நஷ்டம் என்றும், வெளியான 199 படங்களில் 26 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்றும், கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பல மொழிகளில் சினிமாத்துறை இருந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்திய ஆகிய 5 மொழி திரைப்படங்கள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமாக சினிமா துறைகளாக இருந்து வருகிறது. இதில் சிறு பட்ஜெட் படம் எடுத்தாலும் நேர்த்தியான திரைக்கதையின் மூலம் வெற்றிப்படங்களை கொடுப்பது மலையாள திரைப்படங்கள் என்ற பெயர் உண்டு.
Read In English: Kerala Film Producers Association announce Rs 700 crore loss in 2024: ‘Only 26 out of 199 films were successful’
ஆண்டுதோறும் பல வெற்றிப்படங்களை கொடுக்கும் மலையாள திரையுலகிற்கு, நடப்பு ஆண்டு சற்று வீழ்ச்சியாக அமைந்துள்ளது, 2024-ம் ஆண்டு தொடக்கத்தில், மலையாள சினிமாவுக்கு ஒரு பொற்காலமாகத் இருந்திருக்கலாம். மஞ்சும்மேல் பாய்ஸ் மற்றும் பிரேமலு போன்ற படங்கள் வசூலிலும் வரவேற்பிலும் பெரும் வெற்றியை பெற்றது. அடுத்து வந்த ஆடுஜீவிதம், ஏஆர்எம் மற்றும் ஆவேஷம் படங்கள் அந்த வெற்றியை தக்கவைத்தக்கொண்டனர்.
தொடர்ந்து, கிஷ்கிந்தா காண்டம் மற்றும் சூக்ஷ்மதர்ஷினி போன்ற படங்கள் மலையாள சினிமாவுக்கு சாதகமான ஆண்டாக மாற்றியது. இருப்பினும், கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024ல் கேரளாவில் திரைக்கு வந்த 199 மலையாளப் படங்களில் 26 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றதாகவும், இந்த திரைப்படங்களின் மொத்த தயாரிப்பு செலவு ரூ.1000 கோடியை எட்டிய நிலையில், ரூ.300 கோடி மட்டுமே வசூலாகியுள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
இதன் மூலம் மலையாள திரைத்துறைக்கு ஏறக்குறைய ரூ.700 கோடி நஷ்டம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், திரையரங்குகளில் வசூல் இல்லாததும், அதிகரித்து வரும் படங்களின் தயாரிப்பு செலவு, குறிப்பாக நடிகர்களின் சம்பளம் காரணமாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம், பிரேமலு, ஆடுஜீவிதம் மற்றும் ஏஆர்எம் ஆகிய படங்கள் மட்டுமே ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்தன.
சௌபின் ஷாஹிர் தயாரித்த மஞ்சுமல் பாய்ஸ் படம் கிட்டத்தட்ட ரூ.242 கோடியை குவித்தது. கிஷ்கிந்தா காண்டம், குருவாயூர் அம்பலநடையில் மற்றும் வர்ஷங்களுக்கு சேஷம் ஆகியவை ரூ.50 கோடி கிளப்பில் நுழைந்த மற்ற வெற்றிப் படங்களாகும். ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட மணிச்சித்திரத்தாழ், வாலியேட்டான் உள்ளிட்ட பல படங்கள் ஹிட் அடித்து ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ஆண்டாகவும் இது அமைந்தது.
இருப்பினும், மோகன்லால் இயக்குனராக அறிமுகமான பரோஸ் படம் 2024-ம் ஆண்டு வெளியாகி ஏமாற்றம் அளித்தாலும், அவரின் பழைய படங்களான, தேவதூதன் மற்றும் மணிச்சித்ரதாழு அதன் ரீ-ரிலீஸில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. கேரளா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
நட்சத்திர நடிகர்கள் இருந்தால் மட்டும் திரையரங்கிற்கு ரசிகர்கள் வரமாட்டார்கள், சிறிய அளவிலான படங்களின் வெற்றி, தயாரிப்பு செலவைக் கட்டுக்குள் வைத்திருப்பது தொழில்துறைக்கு நல்ல பலனைத் தரும். உண்மையில், ஒரு வருடத்திற்கு 200 படங்கள் என்பது அதன் பக்கத்து மாநில திரைத்துறைகளின் சந்தை இல்லாத தொழில்துறைக்கு நீண்ட காலத்திற்கு வேலை செய்யக்கூடிய ஒன்றல்ல என்றும் அறிக்கையில் கூறியுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கு மலையாள சினிமாவில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தயாரிப்பாளர்கள் சங்கம் சிறிதும் குறையாமல் தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்தால், நல்லது நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.