குஷ்பு மூதாதையர் கட்டிய இந்துக் கோவில்: அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்
கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நடிகை குஷ்பு, அந்த கோவிலை தனது தாயாரின் மாமனார் கட்டியது என்று கூறி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நடிகை குஷ்பு, அந்த கோவிலை தனது தாயாரின் மாமனார் கட்டியது என்று கூறி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
Khushbu Sundar Tamil News: உலகிலேயே நடிகை ஒருவருக்கு கோயில் கட்டினார்கள் என்றால், அது நடிகை குஷ்புவுக்கு மட்டும் தான் என்று சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்றால் மிகையல்ல. 15 வயதில் பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கிய குஷ்பு, இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.
Advertisment
80' 90'ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த குஷ்பு அன்று போல் இன்றும் அதே இளமையோடும், சுறுசுறுப்போடும் இருப்பது திரை வட்டாரத்திலேயே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை குஷ்பு சின்னத்திரை, வெள்ளித்திரை, அரசியல், சமூகவலைதளங்களில் என அனைத்திலும் கலக்கி வருகிறார்.
இந்தநிலையில், சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும், அந்த கோவில் தனது தாயாரின் மாமனார் கட்டியது என்று கூறி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
Advertisment
Advertisements
நடிகை குஷ்பு பிறப்பால் ஒரு முஸ்லிம் ஆவார். ஆனால், இயக்குநர் சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்ட பின்னர், மத வேறுபாடு இன்றி அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று வருகிறார். மேலும் திருமணத்திற்காக மதம் மாறியதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில் ’தான் மதம் மாறவில்லை என்றும் மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை என்றும், தான் ஒரு இந்தியன் என்றும் தைரியமாக பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள இந்து கோவிலை அவரது அம்மாவின் மாமனார் தான் கட்டினார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.