கேரளாவில் மலையாள செய்தித் தொலைக்காட்சியான மாத்ருபூமியில் முதன்மை சப் எடிட்டராக பணிபுரியும் ஸ்ரீஜா என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருக்கையில் ஒரு செய்தியை படிக்கும் போது மகிழ்ச்சியில் இரண்டு நொடிகள் அப்படியே திகைத்துப் போய் நின்றுள்ளார். செய்தி வாசிப்பாளர் திகைத்துப் போகிற அளவுக்கு அப்படி என்ன செய்தியென்றால், கேரள அரசு அவருக்கு சிறந்த செய்திவாசிப்பாளர் விருது அறிவித்துள்ளது. அதை அவர் நேரலையில் செய்தி வாசிக்கும்போதுதான் அவர் படிக்கிற செய்தியில் படித்து தெரிந்துகொண்டதால் மகிழ்ச்சியில் இரு நொடிகள் திகைத்துப் போய் நிறுத்தியுள்ளார்.
பின்னர், கேரள அரசு தனக்கு சிறந்த செய்தி வாசிப்பாளர் விருது அறிவித்துள்ள செய்தியை மகிழ்ச்சியுடன் வாசித்து முடித்தார்.
நேரலையில் ஸ்ரீஜா அந்த செய்தியை வாசிக்கும்போது திகைத்து நின்றது அப்படியே நேரலையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் அவர் குரலில் மகிழ்ச்சியின் புன்னகை வெளிப்படுவதும் செய்தியை படித்து முடிக்கும்போது ஸ்ரீஜா தனது புன்னகையை மறைக்க முயற்சிப்பதும் காணமுடிகிறது. பின்னர், செய்தி டெஸ்க்கில் அமர்ந்திருந்தவர்கள் தன்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததால் ஒளிபரப்பின் போது அவர் சிரிப்புடன் முடித்ததாக ஸ்ரீஜா ஐஇ மலையாளம்.காம் இடம் கூறினார். மேலும், அவர் கேரள அரசின் விருது கிடைத்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.