Advertisment
Presenting Partner
Desktop GIF

இளம் நடிகை பாலியல் புகார்: மலையாள நடிகர் சித்திக் மீது பலாத்கார வழக்கு பதிவு!

ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதில் இருந்து, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Siddique Sexual Harassment Case

இளம் நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மலையாள சினிமாவின் பிரபல நடிகரும் முன்னாள், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான சித்திக் மீது கேரள போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisment

கேரளா திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையில் கேரளா அரசு ஒரு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டது. இந்த குழு கடந்த 2019-ம் ஆண்டு தங்களது அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்பித்ததை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பின், இந்த அறிக்கையில் ஒரு பகுதி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Read In English: Kerala police file rape case against actor and ex-AMMA general secretary Siddique

மேலும் ஹேமா குழுவின் அறிக்கை வெளியானதில் இருந்து, கேரளா திரைத்துறையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உட்பட, அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இளம் நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகரும், முன்னாள் நடிகர் சங்க பொதுச்செயலாளருமான சித்திக் மீது கேரளா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புகார் அளித்த அந்த இளம் நடிகை, இந்த வார தொடக்கத்தில் ஊடகங்கள் மூலம் குற்றச்சாட்டை எழுப்பியதை தொடர்ந்து, சித்திக் தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியான பிறகு, மலைாள திரையுலகில் பரவலான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வெளிப்படையான பாலியல் தொல்லை தொடர்பான சம்பவங்கள் குறித்து அம்பலப்படுத்தியது. இந்த அறிக்கை வெளிவந்ததில் இருந்து, பல நடிகைகள், தங்களுடன் இணைந்து நடித்த நடிகர்கள் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே அந்த இளம் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், திருவனந்தபுரம் நகர காவல் எல்லையில் 376 (கற்பழிப்பு) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கற்பழிப்பு சம்பவம்,  2016-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு இது தொடர்பான பதிவு செய்யப்படும் அனைத்து புகார்கள் குறித்தும் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இக்குழு இந்த வழக்குகள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் நடிகை புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து அறிந்த நடிகர்  சித்திக் உடனடியாக காவல்துறையை அணுகி, தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பும் வகையில் கிரிமினல் சதி நடப்பதாக கூறியிருந்தார். இது குறித்து மாநில காவல்துறைத் தலைமை அதிகாரியிடம் அவர் அளித்த புகாரில், “ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகின் நற்பெயரையும் ஒரு குழுவினர் திட்டமிட்டு களங்கப்படுத்துகிறார்கள்.

இந்த குற்றச் சதியின் பின்னணியில் உள்ளவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது அவசியம். பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்டி வெளியிடும் குற்றவியல் சதியின் பின்னணியில் உள்ள உண்மையையும், குற்றவாளிகளையும் வெளிக்கொணர இந்த விஷயத்தில் பயனுள்ள நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26) 2009 திரைப்படத்தின் முன் தயாரிப்பு விவாதத்தின் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெங்காலி நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் ரஞ்சித் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kerala State
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment