Advertisment

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை : மலையாள உச்ச நடிகர்கள் மீது கேரளா போலீஸ் வழக்கு பதிவு!

நான் ஓய்வறையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு நடிகர் என்னைப் பின்னால் இருந்து பிடித்து முத்தமிட்டார் என்று நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Malayan

கேரள மாநில சலசித்ரா அகாடமி தலைவர் ரஞ்சித்

கேரளா திரையுலகில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) மூத்த உறுப்பினர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கேரள காவல்துறை தனது முதல் வழக்கைத் தாக்கல் செய்தது.

Advertisment

கேரளா மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு குறித்தும், கேரளா திரையுலகில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி ஆய்வு செய்து சமர்பித்த அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்தது.

Read In English: Kerala police file first case, more senior actors accused of sexual misconduct

இந்த அறிக்கையில், பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள், திரையுலகில் நடிக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த பாலியல் தொடர்பான விவகாரங்களில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனிடையே நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் மீது காவல்துறையினர் தங்களது முதல் வழக்கை பதிவு செய்துள்ளது.

இதனிடயே நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 25) இயக்குனரும், கேரள மாநில சலசித்ரா அகாடமியின் தலைவருமான ரஞ்சித் மற்றும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் ஆகியோர் கேரளா நடிகர் சங்கத்தில் இருந்து பதவி விலகினர். தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று (ஆகஸ்ட் 26) ரஞ்சித் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்தனர். அகாடமியின் தலைவரான பிறகு தனக்கு எதிரான பலர் எடுத்த நடவடிக்கையின் வெளிப்பாடுதான் இந்தக் குற்றச்சாட்டு என்று ரஞ்சித் கூறியுள்ளார்.

நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியிட்ட பிறகு, பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா கடந்த வாரம் ஊடகங்களில் ரஞ்சித் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறியிருந்தார். 'பல்லாரி மாணிக்கம்' படத்தின் நடிகர் நடிகைகள் தேர்வின்போது இது குறித்து அவர் கொச்சி நகர காவல்துறையில் புகார் அளித்துள்ளர். இது குறித்து ஐபிசி பிரிவு 354 இன் கீழ் ஒரு வழக்கை பதிவு செய்தது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கேரள அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மலையாள திரை நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சித்திக் மீது கடந்த 2016ம் ஆண்டு பெண் நடிகர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து காவல்துறையில் அளித்துள்ள புகாரில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, தன் மீதான பழிவாங்கும் நடவடிக்கை. “ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகின் நற்பெயரையும் ஒரு குழுவினர் திட்டமிட்டு களங்கப்படுத்துகிறார்கள்.

இந்தக் குற்றச் சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம். இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணரவும், பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை வெளியிடும் கிரிமினல் சதியின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை வெளிப்படுத்தவும் திறம்பட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் குற்றச்சாட்டுகள்

இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகை மினு முனீர், இரண்டு முறை CPI(M) எம்.எல்.ஏ-ஆக இருந்த முகேஷ், அம்மா கட்சியின் முக்கிய தலைவர் எடவேல பாபு; மற்றும் நடிகர்கள் மணியன்பிள்ளை ராஜு மற்றும் ஜெயசூர்யா உள்ளிட்ட பல நடிகர்களிடமிருந்து பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாக குற்றம் கூறியுள்ளார். முனீரின் கூற்றுகளுக்கு முகேஷ், ஜெயசூர்யா மற்றும் பாபு பதிலளிக்காத நிலையில், குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை வரவேற்பதாக ராஜு கூறியுள்ளார்.

"ஹேமா கமிட்டியின் அறிக்கையை அடுத்து வெளிவந்த தகவல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட மாநில போலீஸ் குழுவிடம் நான் புகார் அளிக்கிறேன்" என்று கூறியுள்ள முனீர் ‘காலண்டர்’ (2009) மற்றும் ‘நாடகமே உலகம்’ (2011) படப்பிடிப்பின் போது ஒரு நடிகர் தன்னை ஹோட்டலில் தாக்க முயன்றார். அவர் அறைக்குள் நுழைந்து என்னை படுக்கையில் இழுத்தார், சிறந்த வாய்ப்புகளைப் பெற என்னை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியபோது.  நான் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.

அதற்கு முன், ஒரு காரில் பயணம் செய்யும் போது, (மற்றொரு நடிகர்) என்னிடம் அடுத்த நாள் இரவு என் அறைக்கு வருவதாக என்று கூறினார். அதேபோல் இரவில் என் அறை கதவைத் தட்டினார். 2008ல் “மாநிலத் தலைநகரில் ஒரு படப்பிடிப்பின் போது, நான் ஓய்வறையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு நடிகர் என்னைப் பின்னால் இருந்து பிடித்து முத்தமிட்டார். நான் அவரை கீழே தள்ளிவிட்டு ஓடினேன். என்னையும் அவருடைய பிளாட்டுக்கு அழைத்தார். நான் அழைப்பை நிராகரித்த பிறகு, அவர் தரப்பிலிருந்து எந்த பிரச்சனையும் இல்லை,'' என்று அவர் கூறினார்.

2013 இல், அம்மாவின் உறுப்பினராக விண்ணப்பித்தபோது, “மூன்று படங்களில் நடித்தவர் அம்மாவில் உறுப்பினராகத் தகுதியானவர் என்பதால், விண்ணப்பப் படிவத்தை நிரப்புவது தொடர்பாக நான் ஒரு நடிகரை தொலைபேசியில் அழைத்தபோது, அவர் என்னை தனது பிளாட்டுக்கு அழைத்தார். நான் அவருடைய பிளாட்டில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தபோது, அவர் பின்னால் இருந்து என் கழுத்தில் முத்தமிட்டார். நான் பிளாட்டை விட்டு வெளியே ஓடினேன். அதனால் என்னால் அம்மாவில் உறுப்பினர் ஆக முடியவில்லை.

இவை அனைத்தும் மலையாள திரையுலகத்தை விட்டு வெளியேறி சென்னைக்கு இடம்பெயர வைத்ததது. "நான் அனுபவித்த துன்பங்கள் மற்றும் அதிர்ச்சிகளுக்கு நான் இப்போது நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தேடுகிறேன் என்று அந்த நடிகை குறிப்பிட்டுள்ளார்.

அம்மாவின் இணை பொதுச் செயலாளர் பெயர்

மற்றொரு இளம் நடிரக ஒருவர், நடிகரும் தயாரிப்பாளருமான பாபுராஜ் தன்னை 2019 இல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார். “அவர் (பாபுராஜ்) எனக்கு வரவிருக்கும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். மேலும் படத்தின் தயாரிப்புக் கட்டுப்பாட்டாளரும் மற்ற டெக்னீஷியன்களும் அங்கு இருப்பதாகக் கூறி ஆலுவாவில் (எர்ணாகுளம் மாவட்டம்) அவரது வீட்டிற்கு வரச் சொன்னார். நான் அவருடைய வீட்டுக்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை.

மற்றவர்கள் விரைவில் வருவார்கள். நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி, அவர் எனக்கு ஒரு அறை கொடுத்தார். பின்னர், அவர் என்னை சாப்பிட அழைத்தபோது நான் கதவைத் திறந்ததும், அவர் அறைக்குள் நுழைந்து உள்ளே இருந்து பூட்டினார். அவர் அநாகரீகமாக பேச ஆரம்பித்தார், என்னை கட்டிலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்..

“எந்தவொரு பணியிடத்திலும், பெண்கள் இந்த அனுபவத்தை எதிர்கொள்ளக்கூடாது. அப்போது காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தேன், ஆனால் அவர்கள் கேட்டுக்கொண்டதால் புகார் அளிக்க முடியவில்லை. பாபுராஜ் எனக்கு சவால் விட்டால், முழு அத்தியாயத்தையும் அவர் முன்னிலையில் மீடியாக்கள் முன் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன். நான் தொழிலை விட்டு விலகி கேரளாவுக்கு வெளியே குடும்பத்துடன் வாழ்ந்து வருவதால் எனக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை,'' என்று அவர் கூறியுள்ளார்,

அம்மாவின் இணைப் பொதுச் செயலாளர் பாபுராஜ், குற்றச்சாட்டை மறுத்து, "சட்ட நடவடிக்கையைத் தொடங்குவேன்" என்று கூறியுள்ள நிலையில், தன் மீதான குற்றச்சாட்டின் பின்னணியில் சதி இருப்பதாகவும், “புகார்தாரர் பொது வெளியில் வர வேண்டும். அவர் என் ரிசார்ட்டில் வேலை செய்தவர் என்று நினைக்கிறேன். அம்மாவின் பொதுச் செயலாளராக நான் வருவதைத் தடுப்பதே நோக்கம். அவளுக்கு படங்களுடன் எந்த தொடர்பும் இல்லை. என் மீது வெறுப்பு கொண்டவர்கள் இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளனர். இதன் பின்னணியில் உள்ள சதியை அம்பலப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamil cinema actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment