Advertisment

பெண் நிரூபரிடம் அத்துமீறிய விவகாரம் : நடிகர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு

பெண் பத்திரிக்கையாளரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட விவகாரத்தில் நடிகர் சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Oct 28, 2023 23:08 IST
New Update
Suresh Gopi

நடிகை சுரேஷ் கோபி (ட்விட்டர் படம்)

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரும் பாஜகவின் முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி மீது பெண் பத்திரிக்கையாளரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தமிழில் அஜித்துடன் தீனா மற்றும் விக்ரமின் ஐ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கேரளா பாஜகவின் முக்கிய பிரமுகரான இவர், முன்னாள் பாஜக எம்.பியுமாவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுரேஷ்கோபி தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறார்.

இதனிடையே கேரளா மாநிலம் கோழிக்கூடு பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ்கோபியிடம் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் கேள்விக்கு பதில் அளித்த் சுரேஷ் கோபி அவரின் தோள்மீது கை வைத்து மகளே என்று பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பத்திரிக்கையாளர் சுரேஷ்கோபியின் அருகில் இருந்து நகர்ந்து சென்றுள்ளார்.

தொடர்ந்து ஒருசில நிமிடங்கள் கழித்து மீண்டும் அந்த பெண் பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியபோது சுரேஷ் கோபி மீண்டும் அவர் தோள் மீது கை வைத்துள்ளார். இந்த முறை அவரின் கைகளை தட்டிவிட்ட அந்த பெண் பத்திரிக்கையாளர், மீண்டும் நகர்ந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், சுரேஷ் கோபியின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள சுரேஷ்கோபி, தான் அந்த பெண் பத்திரிக்கையாளரிடம் நட்பு ரீதியில் தான் நடந்துகொண்டதாகவும், இது அவருக்கு தவறாக தெரிந்தால் அவரது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இது அவருக்கு மோசமான உணர்வாக இருந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் வருந்துகிறேன். என்னை வழி மறித்ததால் ஒரு பக்கத்தில் அவரை நகர்த்துவதற்காக இவ்வாறு செய்தேன். நான் ஒரு தந்தை அவரிடம் ஒரு தந்தையை போல் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் என்று தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய பெண் பத்திரிக்கையாளர், அவர் மன்னிப்பு கேட்டது இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தது போல் உள்ளது. அவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ள அவர், இந்த விவகாரம் குறித்து கோழிக்கூடு நகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். பெண் பத்திரிக்கையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சுரேஷ் கோபி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Suresh Gopi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment