சர்கார் Pre Booking : சர்கார் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியிருக்கிறது இந்த திரைப்படம். உலங்கெங்கிலும் சுமார் 3,500 திரைகளில் நாளை இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
அமெரிக்காவில் 4 கோடி ரூபாய் வரை வசூல் செய்த சர்கார்
நடிகர் விஜய், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தின் ப்ரீமியர் ஷோக்கள் இன்று அமெரிக்காவில் திரையிடப்படுகின்றன. ப்ரீ புக்கிங் மூலமாக அதிக அளவு வசூல் சாதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு மெர்சல் படத்திற்காக 3 கோடி ரூபாய் வரை ப்ரீ புக்கிங் மூலமாக வசூல் சாதனை செய்திருக்கிறது. இந்த வருடம் சர்கார் படம் 4 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
சர்கார் Pre Booking - கேரளாவில் 3 கோடி ரூபாய் வரை வசூல்
கேரள மாநிலத்தில் மட்டும் 402 திரையரங்குகளில் சர்கார் படம் வெளியிடப்படுகிறது. விஜய்க்கு கேரளாவில் நிறைய ரசிகர்கள் இருப்பதால் ப்ரீ புக்கிங் மூலமாக 3 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்திருக்கிறது சர்கார்.
கர்நாடகாவில் 590 திரையரங்குகளில் திரையிடப்படும் சர்கார்
கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் மட்டும் சுமார் 590 திரைகளில் திரையிடப்படுகிறது சர்கார் திரைப்படம்.
தமிழ்நாடு மற்றும் புதுவை
தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் சர்கார் படம் காலை 8 மணி முதல் திரைப்படம் திரையிடப்படுகிறது. சென்னை, கோவை, மற்றும் பாண்டிச்சேரியில் இருக்கும் சத்யம் திரையரங்குகளில் முதல் இரண்டு நாட்களுக்கு அனைத்து டிக்கெட்களும் விற்பனையாகியுள்ளன. மயாஜால் திரையரங்குகளில் 78 காட்சிகள் முதல் நாள் மட்டும் திரையிடப்படுகிறது.