கேரள மாநில திரைப்பட விருதுகளில் 2018"-க்கு தேர்வானவர்களின் முழு பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2017 ஆம் ஆண்டு திரைத்துறையில் வெளிவந்த சிறந்த படைப்புகள், நடிகர் நடிகைகள் என அனைவருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 48-வது மாநில அரசு விருதுகள் பட்டியலை கேரள மாநில அமைச்சர் ஏகே பாலன் வெளியிட்டுள்ளார்.
இதில் சிறந்த நடிகைகாக பார்வதி மற்றும் நடிகராக இந்திரான்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை தவிர மம்மூட்டி, மோகன்லால், திலீப், பிரித்விராஜ், துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/4-8-300x172.jpg)
மேலும், தண்ணீர் பிரச்சனைக் குறித்து பேசிய ‘கிணர்’ படத்துக்கு கேரள அரசு விருது அறிவித்துள்ளது. இந்த படம், தமிழில் ’கேணி’ என்ற பெயரில் வெளியாகியது. எம்.ஏ.நிஷாத் இயக்கி இருந்த இந்த படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. அதே சமயம், கேரள மாநிலத்தில் இந்த படத்திற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/4-9-300x156.jpg)
இந்நிலையில், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது இயக்குநர் எம்.ஏ.நிஷாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழருக்கு ஆதரவாக எடுக்கப்பட்டிருந்த கதை என்றாலும், உண்மையை உரக்க கூறியதற்காக தனக்கு இந்த விருது கிடைத்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/4-10-300x175.jpg)
விருது பெற்றவர்களின் முழு விபரம்:
1. சிறந்த திரைப்படம் - ஒட்டமுரி வெளிச்சம்
2. இரண்டாவது சிறந்த திரைப்படம் - ஆடான்
3. சிறந்த நடிகர் - இந்திரான்ஸ் (ஆளுருக்கம்)
4. சிறந்த நடிகை - பார்வதி (டேக் ஆப்)
5. சிறந்த இயக்குனர் - லிஜோ ஜோஸ் பள்ளிசேரி (ஏ மா யூ)
6. சிறந்த குணசித்திர நடிகை - அலென்சியர் தொண்டிமுதலும் திரிக்ஷாசிகளும்
7. சிறந்த குணசித்திர நடிகர் - பாலி வால்சன் (ஏ மா யூ-ஒட்டமுரி வெளிச்சம்)
8. சிறந்த இசையமைப்பாளர் - ஏ.கே. அர்ஜுனன் (பயானகம்)
9. சிறந்த பாடலாசிரியர் - பிரபா வர்மா (ஒலதின் பிரம் க்ளாண்ட்)
10. சிறந்த பின்னணி இசை - கோபி சுந்தர் (டேக் ஆப்)
11. சிறந்த பின்னணி பாடகர் - ஷாபாஸ் அமன் (மிசில்லில் நின்னும் மாயநதி)
12. சிறந்த பின்னணி பாடகி - சித்ரா கிருஷ்ணகுமார் (விமானம்)
13. சிறந்த அறிமுக இயக்குனர் - மகேஷ் நாராயணன் (டேக் ஆப்)
14. சிறந்த குழந்தை நடிகர் - அபிநாத்
15. சிறந்த குழந்தை நடிகை - நட்சத்திரா (ரக்ஷத்கரி பைஜூ)
16. சிறந்த ஒளிப்பதிவாளர் - மனீஷ் மாதவன் (ஏடன்)
17. சிறந்த கதை எழுத்தாளர் - எம்.ஏ. சிஹ்ச்ச்த் (கினார்)
18. சிறந்த திரைக்கதை எழுத்தாளர் - சஜீவ் பாழூர் (தொண்டிமுதலும் திரிக்ஷாசிகளும்)
19. சிறந்த படத்தொகுப்பாளர் - அப்பு பட்டாத்ரி (ஒட்டமுரி வெளிச்சம் மற்றும் வீரம்)
20. சிறந்த கலை இயக்குநர் - சாந்தோஷ் ராமன் (டேக் ஆப்)
21. சிறந்த ஒலி எடிட்டிங் - பிரதாத் தாமஸ் (ஏடன்)