மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்தி ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கேரளா சினிமாவில் தற்போது நடந்துக் கொண்டு இருக்கும் பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும் என்பது புரியாத புதிராக உள்ளது. மலையாள திரைப்பட சங்கமான அம்மாவில் நடிகர் திலீப் மீண்டும் இணைக்கப்பட்டதில் ஆரம்பித்த இந்த பிரச்சனை தற்போது அரசு திரைப்பட விருதுகள் வரை வந்துள்ளது.
பிரபல மலையாள நடிகை பாலியல் கொடுமைக்கு ஆளான வழக்கில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டார். போலீஸ் வழக்கு பதிவானதால் நடிகர் திலீப் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் தான் நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக மோகன் லால் பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில மாதங்களில் நடிகர் திலீப் சங்கத்திற்குள் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட நடிகை உட்பட பல நடிகைகள் சங்கத்தை விட்டு வெளியேறுவதாக அதிரடி முடிவு எடுத்தனர். இதற்கு சங்கம் தரப்பில் இருந்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனியில் புதியதாக இப்போது நடிகர் பிரகாஷ் ராஜின் பெயரும் அடிப்பட தொடங்கியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/2-57.jpg)
இந்த ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் வரும் ஆகஸ்டு 8ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மலையாள நடிகர் சங்கத்திற்கு புதிய தலைவராக இருக்கும் மோகன் லால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் நடிகர் மோகன் லால் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று பிரகாஷ் ராஜ் கேரள அரசிடம் கேட்டுக்கொண்டதாக இருப்பதாகவும், இதுப்பற்றி நடிகர் பிரகாஷ் ராஜ் விரிவான கடிதம் ஒன்றை எழுதி கேரள அரசுக்கு அனுப்பி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த தகவலை நடிகர் பிரகாஷ் ராஜ் முற்றிலும் மறுத்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறியிருப்பது, “ இது போன்ற ஒரு விஷயம் எனக்கு தெரியவே தெரியாது. மோகன்லாலுக்கு எதிராக நான் எந்த வழக்கிலும் கையெழுத்திடவில்லை. அவர் மிகப்பெரிய நடிகர். நாட்டிற்கு கிடைத்த பெரிய சொத்து. அவருக்கு எதிராக நான் எப்படி குற்றம் சுமத்தியிருப்பேன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் மோகன்லால் மோகன்லாலுக்கு எதிரான கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் கேரள அரசிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.