scorecardresearch

Tamil Rockers: KGF 2 முழுப் படத்தையும் ஆன்லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

KGF 2 movie leak on tamil rockers: நடிகர் யாஷின் கே.ஜி.எஃப் – 2 முழுப் படத்தையும் பைரசி வலைதள பக்கமான தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

KGF 2 movie leak: Tamil rockers releases KGF 2 full movie online
KGF 2 movie leaks

KGF 2 movie leak on tamil rockers Tamil News: கன்னட நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். இந்தியா முழுதும் பிரமாண்ட வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் 2ஆம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் நிலவிய கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கே.ஜி.எஃப் படத்தின் 2ஆம் பாகம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், இன்று உலகம் முழுதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.

கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார்.

கே.ஜி.எஃப் – 2 படம் இன்று காலை முதல் காட்சியாக வெளியான நிலையில், படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு அதிகளவிலான ரசிகர்கள் குவித்து இருப்பதாகவும், தங்களின் எதிர்பார்ப்பை 100% மேல் பூர்த்தி செய்துள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் யாஷின் கே.ஜி.எஃப் – 2 முழுப் படத்தையும் பைரசி வலைதள பக்கமான தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. மேலும், இப்படத்தை பல்வேறு பிரபலமற்ற இணையதளங்களும், டெலிகிராம் செயலியின் பக்கங்களும் வெளியிட்டுள்ளன. இது படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது.

கே.ஜி.எஃப் – 2 திரைப்படம் மட்டும் ஆன்லைனில் கசிந்த முதல் கன்னட படம் அல்ல. முன்னதாக, ஒன் கட் டூ கட், லவ் மாக்டெய்ல் 2, ஏக் லவ் யா, 100, முகில்பேட், கோவிந்தா கோவிந்தா, அக்ஷி, மதகஜா, த்ரிஷ்யா 2, கன்னடிகா, படவா ராஸ்கல் மற்றும் லவ் யூ ராச்சு உள்ளிட்ட தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகளும் பைரசி வலைதள பக்கங்களுக்கு இரையாயின. அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் படமும் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kgf 2 movie leak tamil rockers releases kgf 2 full movie online