கேஜிஎஃப், சாலார் படங்களின் அடுத்தடுத்த வெற்றி மூலம் பிரபலமான இயக்குனர் பிரஷாந்த் நீல், தற்போது சலார் 2 மற்றும் என்டிஆர் 31 படங்களில் பணிபுரிந்து வருகிறார்.
கன்னடம், தெலுங்கில் படங்களைத் தயாரித்த அவர், அடுத்து தமிழிலும் நேரடிப் படம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் நாளிதழ் சமீபத்திய செய்தியின் படி, ‘இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும், இதில் அஜித்குமார் நடிப்பார், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட KGF 3 க்கு களம் அமைக்கும் இரண்டாவது படத்துடன் அஜித்-பிரஷாந்த் பிராஜக்ட் இரண்டு பாகமாக வெளியாகலாம்.
யாஷ் மற்றும் அஜித் இணைந்து ஸ்கீரினை பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் தமிழில் அவர்களின் மிகப்பெரிய படமாக இருக்கும்’, என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் ரகு தாத்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், தயாரிப்பு நிறுவனம் கால் பதிக்கிறது.
தற்போது மகிழ் திருமேனியின் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
நீல் பிரசாந்த் படத்திற்காக 2, 3 ஆண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது 2026 இல் திரைக்கு வரும், என்று கூறப்படுகிறது
இந்த அறிவிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
இருப்பினும், எந்தவொரு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கமான ஒரு ஆதாரத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகியது.
இது பழைய ஊகம், இப்போது மீண்டும் வெளிவந்துள்ளது, இந்த செய்தியின் படி உறுதியான எதுவும் இதுவரை நடக்கவில்லை என்று, அவர்கள் தெரிவித்தனர்.
Read in English: KGF director Prashanth Neel to join hands with Ajith Kumar? Here’s the truth
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“