Advertisment

முகம் மூடிய கமல்ஹாசன்... ஆயுதத்துடன் நிழல்கள் : மணிரத்னம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள 234-வது படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
KH 234

கமல்ஹாசன் 234 படத்தின் போஸ்டர்

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் உலக நாயகன் கமல்ஹாசன், பிறந்த நாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ள தனது 234-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு விக்ரம் என்ற படத்தை கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது. இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அந்த வகையில் கடந்த 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பிறக கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தற்காலிகமாக கமல்ஹாசன் 234 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கமல்ஹாசனின் பிறந்த நாளை (நவம்பர் 7) முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் கமல்ஹாசன் கிழிந்த உடையில் காட்சியளிக்கிறார். அவரது முகம் முழுவதும் முக்காடு போடப்பட்டிருப்பதால், அவரது கண்கள் மட்டுமே போஸ்டரில் காணப்படுகின்றன.

முகமூடி அணிந்த முகத்திற்குக் கீழே, ஆயுதங்களைத் தாங்கிய உருவங்களின் நிழற்படங்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் படம் பீரியட் படமாகவோ அல்லது ஃபேன்டஸியாகவோ இருக்கலாம் என்று போஸ்டர் மூலம் தெரியவருகிறது. பெரிய பட்ஜெட் படங்களின் காலத்திற்கு ஏற்ப, கமலும் மணிரத்னமும் ஏதோ ஒரு பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இன்று (நம்பர் 06) மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டிலுடன் டீஸர் வெளியிடப்பட உள்ளது.

இந்த படத்தை கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவரும் இணைந்து ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இந்த படத்திற்காக ணைந்து செயல்பட்டு வருகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மற்றும் ஸ்டண்ட் நடன இயக்குனரான அன்பறிவ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் இதர விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் முதன்முதலில் நாயகன் (1987) படத்திற்காக இணைந்தனர், இது பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலாவின் தி காட்பாதர் படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டது. தற்போது, 35 வருட இடைவெளிக்குப் பிறகு, இருவரும் இணைந்துள்ள படம்  அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maniratnam Tamil Cinema News Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment