Advertisment

அரசை குறை கூறவேண்டாம்: குஷ்பு திடீர் கருத்து

உங்கள நீங்க தட்டிக் கேளுங்க. எங்க தப்பு பண்றேனு? உங்கள கேளுங்க . அந்த கேள்விக்கு பதில் உங்களுக்கு கிடச்சா...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அரசை குறை கூறவேண்டாம்: குஷ்பு திடீர் கருத்து

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒரு பொறுப்பான குடிமக்களை போல் நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று குஷ்பு தெரிவித்தார்.

Advertisment

தனது ட்விட்டர் கணக்கில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், சமூக விலகல் நெறிமுறை, முகக்கவசம் குறித்த  அவசியத்தையும் வலியுறித்தினார்.

தாய்லாந்து மாணவர்கள் பள்ளி ஹேர்கட் விதிகளில் திருத்தம் செய்யக் கோருவது ஏன்?

தமிழகத்தில் இன்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்தது.

சென்னையில் இன்று மட்டும் 1,155 பேருக்கு கொரோனா ஆபத்து கண்டறியப்பட்டது.  தற்போது, அங்கு கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13,744 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்தனர்.  இதுவரை கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,494-ஆக அதிகரித்துள்ளது.

குஷ்பு, தனது ட்விட்டர் வீடியோவில், " தமிழ்நாட்டில கொரோனா தோற்று அதிகரித்துக் கொண்டு வருகிறது. அரசாங்கத்தை மட்டும் குற்றம் சொல்றதில... எந்த அர்த்தமும் இல்ல. அரசாங்கம் சொல்றத  நாம கேட்கிறோமா?  சோசியல் டிஸ்டன்ஸ்  மெயின்டெயின் பண்ண சொல்றாங்க... நாம பண்றோமா? மாஸ்க் போடா சொல்றாங்க, நாம பயன்படுத்துறோமா?   மாஸ்க் முக்கியமா போடுறதுக்கு காரணம்... மத்தவங்க இருக்கும் போது, அதே காத்த நாம் சுவாசிக்க வேண்டாம். அதனால தான் மாஸ்க் போதும்போது, நம்ம மூக்கு, வாய் மூடியிருக்கணும். சோசியல் டிஸ்டன்சும் அதே மாறி தான். யாரையும் தொட்டு பேசாதிங்க. கஷ்டமான விஷயம் தான். ஆனா, இப்ப நாம் இந்த  கஷ்டத்த அனுபவிச்சா நாளைக்கு நிச்சயமா நல்லா இருப்போம். அது ஏன் நமக்கு புரிய மாட்டிக்குது" என்று கேள்வி எழுப்பினார் .

 

மேலும், " சோசியல் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுங்க. கொரோனா போகனும்னா அரசாங்கம் சொல்றத நாம கேட்டுதான் ஆகனும். ஒரு பொறுப்பான குடிமகன் மாறி நம்ம நடந்துக்கணும். சோசியல் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுங்க. மாஸ்க் போடுங்க. அரசாங்கம் தப்பு பண்ணும் பொது தட்டிக் கேளுங்க .அது தப்புன்னு சொல்வேயில்லை. ஆனால், உங்கள நீங்க தட்டிக் கேளுங்க. எங்க தப்பு பண்றேனு? உங்கள கேளுங்க.... அந்த கேள்விக்கு பதில் உங்களுக்கு கிடச்சா... நிச்சயமா கொரோனாவா நம்மளால ஒழிக்க முடியும்" என்று குஷ்பு தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment