Advertisment
Presenting Partner
Desktop GIF

நாயகி வந்ததால் என் டூயட் போச்சு: ரஜினிகாந்த் படத்தில் நடித்தது குறித்து நடிகை குஷ்பு வருத்தம்!

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் நான் ஒரு கேரக்டரில் நடித்ததற்கு நடிகை குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Rajini Kushboo

ரஜினிகாந்த் - குஷ்பு

ரஜினிகந்த் காத்தி சுரேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த அண்ணாத்த படத்தில், தான் ஒரு கேரக்டரில் நடித்தது தனக்கு வருத்தத்தை அளித்த்தாக நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

Advertisment

Read In English: Khushbu regrets working in Rajinikanth’s Annaatthe; reveals Nayanthara’s role was ‘pushed into it’ at the last minute: ‘I was very disappointed’

கார்த்தி நடித்த சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சிவா, அடுத்து அஜித் நடிப்பில், வீரம் (2014), வேதாளம் (2015), விவேகம் (2017) மற்றும் விஸ்வாசம் (2019) ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட இவர், கடந்த 2021-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு சமீபத்தில் வெளியான சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கியிருந்தார்.

ரஜினிகாந்த் மற்றும் சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த்தாக இருந்தாலும், அண்ணாத்த மற்றும் கங்குவா படங்கள் கடுமையாக விமர்சனங்களை பெற்று பாக்ஸ்ஆபீஸில் தோல்வியை சந்தித்த்து. தற்போது சிறுத்தை சிவா அடுத்து எந்த படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அவர் இயக்கிய அண்ணாத்த படத்தில் நான் ஒரு கேரக்டரில் நடித்த்தற்கு நடிகை குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisement

அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட, அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ் அண்ணன் தங்கையாக நடித்த நிலையில், நயன்தாரா, நாயகியாக நடித்திருந்தார். மேலும் மீனா, குஷ்பு, சூரி ஆகியோருடன், பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். ஜெகபதி பாபு இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் குஷ்பு மீனா இருவரும், ரஜினிகாந்தின் முறைப்பெண்ணாக நடித்திருந்தனர்.

இந்த படம் குறித்து பேசிய நடிகை குஷ்பு, அண்ணாத்த படத்தில் நடித்த்தற்காக வருந்துவதாகவும், இந்த படத்தில், தனது கேரக்டர் ஆரம்பத்தில் சொன்னது போன்று படமாக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஒரு நேர்காணலில், பேசிய தனது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தி படங்கள் அதிகம் நடிக்காததது வருத்தத்தை கொடுக்கும் அளவுக்கு குறைவாக இருந்தாலும், பல தென்னிந்தியத் திரைப்படங்கள் நான் நிராகரித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

“சமீபத்திய உதாரணம் நான் ரஜினிகாந்துடன் நடித்த படம். எனக்கு சொன்ன கேரக்டர் போல் அந்த படம் இல்லை. எனக்கு ரஜினி சாருடன் (திரையில்) நான் ஜோடியாக நடிக்கவில்லை, இந்தப் படத்தில் மீனாவும் நானும் இணைந்து நடித்தோம், நாங்கள் இருவரும் கதாநாயகிகளாக இருப்போம் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள். ரஜினி சாருக்கு ஜோடியாக வேறு நடிகர்கள் நடிக்க மாட்டார்கள் என்றும், நாங்கள் படம் முழுவதும் இருப்போம் என்றும் நம்பி அந்த அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இது மிகவும் மகிழ்ச்சியான, நகைச்சுவையான மற்றும் வேடிக்கையான கேரக்டராக இருந்தது. ஆனால், அந்த ப்ராஜெக்ட் விஸ்வரூபம் எடுக்கையில், ரஜினி சாருக்கு திடீரென ஒரு ஹீரோயின் வந்தார். அப்போது எனது கேரக்டர் ஒரு காமெடியாக மாற்றப்படும் என்பதை உணர்ந்தேன். டப்பிங் செய்யும் போது படத்தைப் பார்த்த பிறகு, நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், ”என்று விக்கி லால்வானியுடன் நடந்த பேட்டியின்போது குஷ்பு கூறியுள்ளார். இப்படத்தில் ரஜினியின் காதலியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இந்த மாற்றம் ரஜினிகாந்தின் முடிவாக இருக்குமா என்ற கேள்வியை  நிராகரித்தார். “அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை. எனக்கு அவரை பல வருடங்களாக தெரியும். சரியாக என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை; ஒருவேளை ரசிகர்கள் அதைக் கேட்டிருக்கலாம் அல்லது இயக்குனரும் தயாரிப்பாளரும் ஒரு புதிய நாயகியை படத்தில் இணைக்க நினைத்திருக்கலாம். ஆரம்பத்தில் நானும் மீனாவும் ரஜினி சாருடன் தனித்தனி டூயட் பாடல்கள் வைத்திருந்தோம். இதற்கு சரியான ஜோடி இருக்க வேண்டும் என்று பின்னர் முடிவு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

    kushbhu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment