/tamil-ie/media/media_files/uploads/2020/05/Anandita-Sundar-Khushbu-Sundar.jpg)
Anandita Sundar, Khushbu Sundar
Khushbu Sundar: தமிழ் சினிமாவில் 90-களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். லட்டு போன்ற முகம், பூசினாற் போன்ற உடல், குறையாத க்யூட்னெஸ், இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதனால் அவருக்கு, கோவில் கூட கட்டினார்கள், அந்த அளவிற்கு கொள்ளை கொள்ளும் அழகு.
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு… அறிக்கை வெளியிட்டது தமிழக அரசு!
50 வயதை நெருங்கும் குஷ்பு இன்றும் இளமையாக நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் அவர், சில ஆண்டுகளாகவே டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை இயக்குநர் சுந்தர் சி-யை மணந்துக் கொண்ட குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் குஷ்புவின் இளைய மகள் அனந்திதா சேலை கட்டியிருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் குஷ்பு. உடல் பருமனாகக் காணப்பட்ட, அனந்திதா தற்போது இளைத்து படு ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். ”மகள்கள் உங்கள் சேலையை பகிர்ந்துக் கொள்ளும் தருணம், வாழ்க்கையின் பெருமை மிகு தருணம், மகிழ்ச்சியான அம்மா” என்ற கேப்ஷனோடு, அந்தப் படத்தைப் பகிர்ந்திருக்கிறார். இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா முடக்கம்: விவசாயத்தில் இறங்கிய இளம் தமிழ் நடிகை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.