நடிகை குஷ்பு சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வரும், நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ட்விட்டரில் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் எதிர் கட்சியினரின் செயல்பாடுகளில் தனக்கு உடன்பாடு இருந்தால், அதையும் வெளிப்படையாக பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் வலது கண்ணில் கட்டு போட்டவாறு ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்த குஷ்பு, சில நாட்களுக்கு சமூக வலைதளங்களில் தன்னால் ஆக்டிவாக இருக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து குஷ்பூவுக்கு என்ன ஆனது என அனைவரும் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் அவர் முன்னணி ஊடகம் ஒன்றிற்கு அளித்த தகவலில், “கண்ணில் சிறிய கட்டி இருந்தது. அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இன்னும் ஒருவார காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். தற்போது நான் நலமாக இருக்கிறேன். தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நடிக்க வேண்டிய பணிகள் எதுவும் இப்போது இல்லை. வாட்ஸ் அப், ட்விட்டரில் இப்போது நேரம் செலவிட முடியாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென பிரபலங்களும், ரசிகர்களும், நலம் விரும்பிகளும் தங்கள் வாழ்த்துகளை குஷ்பூவுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
நலம் பெற்று விரைவில் களத்தில் இறங்கும்படி நடிகை கஸ்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.
விரைவில் நலம் பெற பேட்மிண்டன் பிளேயர் குட்டா ஜாவ்லா வாழ்த்தியுள்ளார்.
சீக்கிரம் நலம் பெறுங்கள் அக்கா என, தெலுங்கு நடிகர் மனோஜ் வாழ்த்தியுள்ளார்.
சீரியஸாக எதுவும் இருக்காது என நினைக்கிறேன். விரைவில் நலம் பெற்று வாருங்கள் என இந்த பயனர் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”