/indian-express-tamil/media/media_files/WYrqMb0XaGhVDfN45kIk.jpg)
Khushbu Sundar
குஷ்பு தயாரிப்பில், தமன்னா பாட்டியா, ராஷி கண்ணா நடித்த அரண்மனை 4 பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.
’பெண்களை மையமாக வைத்து மட்டுமே படம் எடுப்பேன் என்று சொல்லும் தயாரிப்பாளர் நான் இல்லை. டார்லிங்ஸ், பதாய் ஹோ, க்ரூ போன்ற படங்களை எடுக்க விரும்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தென்னிந்தியாவில் இன்னும் அந்த வகையான மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸ் இல்லை.
அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும். பதாய் ஹோ தமிழில் எடுத்த போது நன்றாக ஓடவில்லை’, என்று PTI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குஷ்பு தெரிவித்தார்.
”ஒரு தயாரிப்பாளராக, என்னுடைய உணர்வுகள் மிகவும் கமர்ஷியல் ஆனவை, ஆனால் எனது படங்களில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் கவனமாக இருக்கிறேன்.
நீங்கள் ஒரு பெண்ணை மோசமான வெளிச்சத்தில் காட்ட வேண்டியதில்லை.
ஒரு பெண் மோசமான உறவில் இருப்பது சரிதான், அது வாழ்க்கையின் ஒரு பகுதி, என்று ஸ்கிரீனில் நீங்கள் எதையும் காட்டத் தேவையில்லை. நான் அதை ஆதரிக்கப் போவதில்லை. ஆனால் மற்றபடி கமர்ஷியல் படங்கள் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மிகவும் பிரசங்கித் திரைப்படம் எடுக்க வரவில்லை.
இப்போது திரைப்படங்கள் உருவாகும் விதத்தில் பெரிய மாற்றம் வந்துள்ளது. ஆம், ஒரு ஹீரோவின் பெயரில் மட்டுமே படங்கள் விற்கப்படுகின்றன என்று நீங்கள் நினைக்கும் ஹீரோக்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.
ஆனால் பெண்களும் படத்தை முழுவதுமாக தோளில் சுமந்து கொண்டு இன்னும் ஹிட் கொடுக்க முடியும் என்பது பிரியலின்ட் ஆன விஷயம்.
ஒரு வெற்றிகரமான திரைப்படத்தை எடுக்க, நீங்கள் ஒரு ஹீரோவை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கதைதான் படத்தின் அடிப்படை ஹீரோ. அந்த மாற்றம் புத்திசாலித்தனமானது, என்று நான் நினைக்கிறேன்” இவ்வாறு குஷ்பு அந்த பேட்டியில் கூறினார்.
Read In English: Khushbu Sundar would love to make films like Darlings, Badhaai Ho: ‘Unfortunately, we still lack that kind of audience in South India’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.