Khushbu Latest Tweet: காங்கிரஸ் கட்சியிலிருக்கும் நடிகை குஷ்பு மத்திய மற்றும் மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற கூட்ட தொடர், கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தினமும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. சட்ட மன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றன.
இதற்கிடையே அப்படியொரு ட்வீட்டை தனது சமூக வலைதளத்தில் தட்டி விட்டிருக்கிறார் நடிகை குஷ்பு. அப்படி என்ன விஷயம் என்கிறீர்களா? “தமிழ் நாட்டு முதல்வர் பேசுவதைப் பார்க்கும்போது, எனக்கு சிரிப்பு வருகிறது. நேர்மை, நியாயம், தர்மம், ஊழலற்ற ஆட்சி… ஏன் சார் காமெடி பண்றீங்க? ஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்.. நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல, ஆனால் அது எங்கள் தொண்டையை கட்டாயப்படுத்தி வரவழைக்கப்படுகிறது” என்பது தான் அது.
Looking at TN #CM speaking, I laugh..nermai, nyaayam, dharmam, uzhal illadhu aatchi..yen Sir comedy pannuringe?You are a classic example of what a CM should not be..you are not the chosen one by the people but forced upon us down our throats..
— KhushbuSundar ❤️❤️❤️ (@khushsundar) 19 July 2019
குஷ்புவின் இந்த கருத்தை ஒருபுறம் ஆதரித்தும், மறுபுறம் விமர்சித்தும் பதிவுகள் பறக்கின்றன ட்விட்டரில்!